கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென அறிவித்த இந்திய பிரதமர் மோடி, அத்தொகையை அக்குழந்தைகளி பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுமென்று கூறினார். வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம். கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி கூறியுள்ளார். புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவிட்டுள்ளார்