வியாசர்பாடி காவல் நிலையத்தில், எஸ்.ஐ.,யை தாக்கி, ரவுடிகள் மூவர் தப்பியோடினர். சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர்கள் அஜித்குமார், 24, அஜய் புத்தா, 26, மற்றும் ஜெகதீஸ்வரன், 20.இதில், அஜித்குமார் மீது கொலை வழக்கு உள்ளிட்ட, 25 வழக்குகள் உள்ளன. அஜய் புத்தா, ஜெகதீஸ்வரன் மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக, வியாசர்பாடி போலீசார், இவர்கள் மூன்று பேரையும் பிடித்து, காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணியளவில், உதவி ஆய்வாளர் வினோத்குமார் மட்டும் இருந்துள்ளார்.
அப்போது, ‘லாக்கப்’பில் இருந்த மூன்று பேரும், திடீரென ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
இதை பார்த்த வினோத்குமார், லாக்கப்பை திறந்து, மூன்று பேரையும் வெளியில் அழைத்து சமாதானம் செய்தார். திடீரென, அஜித்குமார், அங்கிருந்த கண்ணாடியை உடைத்து, கழுத்தை அறுத்துக் கொள்வதாக மிரட்டினார். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து, வினோத்குமாரை தாக்கி, அங்கிருந்து தப்பினர். இது தொடர்பாக, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. காவல் நிலையத்திற்கு வந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, சம்பவம் குறித்து விசாரித்தார்.
மேலும், போலீசார் தனிப்படை அமைத்து, தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனர். காவல் நிலையத்தில் நாடகமாடி, உதவி ஆய்வாளரை தாக்கி ரவுடிகள் தப்பியது, காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.