கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாதென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது,* ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ள வைத்துவிடலாம். கரோனாவால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் இதனை இப்படி நீட்டித்துக்கொண்டிருக்க முடியாது. மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நான் ஒப்படைத்துள்ளேன். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையே தேவை. தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக செயல்படும் என்று தெரிவித்தார்.