சென்னையில் உள்ள பள்ளிகளில் இருந்து வரும் பாலியல் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உடனடியாக விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகாரில் போதிய ஆதாரம் உள்ளது என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.