8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நட்சத்திர உருவாக்கம் குறைந்ததற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திரங்கள் உருவானது குறித்து ஆய்வு செய்த வானியல் ஆராய்ச்சியாளர்கள்சுமார் 8 முதல் 10 பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதிக அளவில் பால்வெளிகள் உருவானதையும் அதன் பிறகு அது படிப்படியாக குறைந்ததையும் கண்டறிந்து துணுக்குற்றனர். இதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்ட அவர்கள்எரிபொருள் பற்றாக்குறையே பால்வெளிகள் குறைந்ததற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று கண்டறிந்தனர். பால்வெளிகளின் அணு ஹைட்ரஜன் வாயு அளவே ஹைட்ரஜன் உருவாக்கத்திற்கு தேவையான மிகவும் முக்கியமான எரிபொருள் ஆகும். 9 பில்லியன் வருடங்கள் மற்றும் 8 பில்லியன் வருடங்களுக்கு முன்பான ஹைட்ரஜன் அளவை கணக்கிட்ட இரண்டு ஆய்வுகள் இம்முடிவுக்கு அவர்கள் வர உதவியுள்ளன. புனேவில் உள்ள தேசிய வானியற்பியல் மையம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் வானிலை ஆராய்ச்சியாளர்கள்ஜெயன்ட் மீட்டர்வியூ ரேடியோ டெலஸ்கோப் எனும் தொலைநோக்கியின் உதவியுடன் 9பில்லியன் வருடங்களுக்கு முன்பு பால் வெளிகளில் இருந்த அணு ஹைட்ரஜன் வாயு அளவை கணக்கிட்டனர். இதன் முடிவும் இதற்கு முன்னர் அவர்கள் ஆய்வு செய்த 8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பால் வெளிகளில் இருந்த அணு ஹைட்ரஜன் வாயு அளவும் ஆய்வின் முக்கிய பகுதிகளாக இருந்தன. ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் எனும் சஞ்சிகையில் 2021 ஜூன் 2 அன்று இந்த ஆராய்ச்சி குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய தேசிய வானியற்பியல் மையத்தின் முனைவர் படிப்பு மாணவரும்ஆராய்ச்சிகளின் தலைமை எழுத்தாளருமான ஆதித்யா சவுத்ரி, “9 பில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்த பால் வெளிகளின் அணு எரிவாயுவோடு ஒப்பிடும்போதுதற்போதைய நட்சத்திரங்களில் இருக்கும் எரிவாயுவின் அளவு சுமார் 10மடங்கு குறைவானதாகும்,” என்று கூறினார்