கோவா அருகே மருத்துவ உதவி தேவைப்பட்ட வணிககப்பல் கேப்டனை, இந்திய கடலோர காவல்படைஹெலிகாப்டர் துரிதமாக மீட்டு மருத்துவமனையில்சேர்த்தது. மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்புமையத்திலிருந்து, இந்திய கடலோர காவல் படைக்குஇன்று காலை 4.30 மணியளவில் ஒரு அவசர அழைப்புவந்தது. கோவாவுக்கு தென்மேற்கே 109 நாட்டிக்கல்மைல் தொலைவில் உள்ள எம்.டி எலிம் என்ற சரக்குகப்பலில், 50 வயதான தென்கொரிய கேப்டனுக்குஅவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக தகவல்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவாவிலிருந்து இந்திய கடலோர காவல்படை கப்பல் சி-158, மீட்பு பணிக்கு இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டது. மீட்பு பணியை துரிதமாகமேற்கொள்ள கடலோர காவல் படையின் சேத்தக் ரகஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டது. மோசமானவானிலையிலும், அந்த ஹெலிகாப்டர் மார்ஷல் தீவைச்சேர்ந்த எம்.டி.சலீம் என்ற அந்த கப்பலை நெருங்கியது. ஹெலிகாப்டரில் சென்ற டைவர் கப்பலில் இறங்கிநோயாளியை பத்திரமாக ஹெலிகாப்டரில் ஏற்றினார். கோவாவின் வாஸ்கோ நகரில் எஸ்எம்ஆர்சிமருத்துவமனையில், சரக்கு கப்பல் கேப்டன்சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நன்றாகஉள்ளது.