கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசுஆணைப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. அரசு வழிகாட்டுதல்களை மீறி வெளியேவருபவர்களின் வாகனங்களை சோதனை செய்து உரியஅனுமதி இல்லாமல் செல்பவர்கள் மீது சட்டபடிநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 560 இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுகாவல் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் தணிக்கைசெய்து வருகின்றனர். 2. இன்று (6.6.2021) காலை 7.45 மணியளவில்சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் காவலர்கள் வாகனதணிக்கை செய்து கொண்டிருக்கும் பொழுது, காரில்உரிய அனுமதியின்றி பெண் ஒருவர் முகக் கவசம்அணியாமல் வந்தவரை, காவல்துறையினர் நிறுத்திவிசாரணை செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பெண்முககவசம் அணியாமல் வந்தமைக்காக ரூ.500 அபராதம்விதித்து ரசீதை மேற்படி பெண்ணிடம் கொடுத்துள்ளனர். உடனே மேற்படி பெண் தனது தாய்க்கு செல்போன் மூலம்தகவல் கொடுத்து சம்பவயிடத்திற்கு வர கூறியுள்ளார். 3.சம்பவயிடத்திற்கு வந்த பெண், போலிசார் வழங்கியரசீதை வாங்கி கீழே ஏறிந்து விட்டு, முகக் கவசம்அணியாமல் தான் ஒரு பெண் வழக்கறிஞர் என்று உரக்கசப்தமிட்டு காவல்துறையினரை பணி செய்யவிடாமல்தடுத்து மிரட்டியுள்ளார். மிரட்டிய பெண் வழக்குறைஞர்தனுஜா கத்துலா, க/பெ.பழனிவேல் ராஜன், கீழ்பாக்கத்தைசேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது குறித்துசம்மந்தப்பட்ட போக்குவரத்து காவலர், சேத்துப்பட்டுகாவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில்மேற்படி தனுஜா கத்துலா மீது 269, 270, 290, 353, 294 (b)506 (i) இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் படிவழக்குப்பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது. 4.தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி முன் களபணியில் இருந்து வரும் அனைத்து அரசுதுறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்கள்ஒத்துழைப்புடன் கொரோனா நோய் தொற்றுகுறைக்கப்பட்டுள்ளது. காவல் துறையின்நடவடிக்கைகளில் பொதுமக்களிடம் கனிவுடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனகாவல்ஆணையர் உத்தரவு பிறபித்துள்ளார். காவல் துறையினர் 24 மணி நேரமும் 3 பிரிவுகளாக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் பணி செய்துவருகின்றனர். 5.மேற்கண்ட வாகன தணிக்கையில் நடைபெற்றசம்பவம் விரும்பதகாத வகையில் நடைபெற்று உள்ளது. எனவே பொதுமக்கள் அரசாங்கத்தினுடையவழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடித்துகாவல்துறையினருக்கு ஊரடங்கை அமல்படுத்துவதற்க்குமுழு ஒத்துழைப்பு வழங்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.