இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு 11.06.2021 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திருக்கோயிலில்ரூ.8.76 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கேபிள்கார் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்து பணி முன்னேற்றம்குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம்விவரங்களை கேட்டறிந்தார். கேபிள்கார் பணியினை இந்தஆண்டு இறுதிக்குள் முடிக்கும் வகையில் விரைந்துசெயல்படுத்துமாறு அறிவுரை வழங்கினார். இது மட்டுமின்றிவாகன நிறுத்துமிடத்திலிருந்து கேபிள்கார் இயக்கப்படும்இடம் வரை வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள்ஆகியோரது நலனைக் கருத்தில் கொண்டு பேட்டரிவாயிலாக இயங்கும் வாகனங்களை பயன்படுத்துமாறுஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில்நடைபெற்று வரும் சாலைப்பணியினை விரைந்துமுடிக்கவும், திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குசுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தரவும் மற்றும்அப்பகுதியில் உள்ள திருக்குளங்களை புனரமைக்கவும்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போதுஇந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இதர அரசுஅலுவலர்கள் உடனிருந்தனர். அதன்பின்னர் மயிலாடுதுறை மாவட்டம்திருவெண்காட்டில் உள்ள இந்து சமயஅறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளஉயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றைநேரில் ஆய்வு செய்து அப்பள்ளிகளுக்குத் தேவையானஉட்கட்டமைப்பு வசதிகளை புனரமைக்கவும் புதிதாககழிப்பிடங்களை கட்டுவதற்கும் தேவையானகருத்துருக்களை இந்து சமய அறநிலையத்துறைஆணையருக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார். மேலும் ஆங்கில வழிக்கல்விஅறிமுகப்படுத்தவும் சுயநிதித் திட்டத்திலிருந்து அரசுஉதவிபெறும் திட்டமாக மாற்றுவதற்கு தேவையானகருத்துருக்களை அனுப்பி வைக்குமாறுமாறும்மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறைஆணையர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர்கள்உடனிருந்தனர். இறுதியாக கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ளதிரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தைமாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்களுடன்சேர்ந்து கூட்டாக ஆய்வு செய்தார். அவ்விடத்தில், 2021–ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறக்கையில்அறிவிக்கப்பட்டிருந்த உலகத்தரத்திலான வள்ளலார்சர்வதேச மையத்தினை உருவாக்குவதற்குத் தேவையானதிட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாகவிரிவான கள ஆய்வை மேற்கொண்டார்.இவ்வாய்வின்போது இந்து சமய அறநிலையத்துறைஆணையர், கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.