ஜார்ஜ் ப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது

கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின் போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்படுவதை டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண் வீடியோ எடுத்தார். அப்போது அவருக்கு 17 வயது. டார்னெல்லா ஃபிரேசியர் எடுத்த அந்த வீடியோவே உலகம் முழுவதும் பரவி, அமெரிக்காவில் போராட்டம் வெடித்ததற்கும், உலக முழுவதும் அதற்கு ஆதரவு எழுவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது. இந்த நிலையில், டார்னெல்லா ஃபிரேசியருக்கு சிறப்பு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஊடகம், இலக்கியம், இசைஆகிய துறைகளில் வழங்கப்படும் உயரிய விருதாக புலிட்சர் விருது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.