இந்தியாவுக்கு வெளியே புதிதாக கண்டறியப்பட்டுள்ள‘டெல்டா பிளஸ்’ என்ற மாறுபட்ட கொரோனா, கவலையளிக்கக் கூடியதாக இன்னும் வகைப்படுத்தவில்லைஎன நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார். இது குறித்து தில்லியில் உள்ள பத்திரிகை தகவல்அலுவகத்தின் தேசிய ஊடக மையத்தில் இந்த வாரதொடக்கத்தில் அளித்த பேட்டியில் டாக்டர் வி.கே.பால்கூறியதாவது: ‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய மாறுபட்ட கொரோன வகைகண்டறிப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம், புதிதாககண்டறியப்பட்ட வைரஸ் (Variant of Interest (VoI)). இதுகவலையளிக்க கூடியதாக Variant of Concern (VoC). இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. கவலையளிக்கக்கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும். இப்போதைக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவின் தன்மைபற்றி எங்களுக்கு தெரியாது. இந்த மாறுபட்ட கொரோனா நம் நாட்டில் இருக்கிறதாஎன்பதை கண்காணித்து, அதற்கேற்ப சுகாதாரநடவடிக்கைகளை எடுப்பதுதான் நாம் மேற்கொள்ளவேண்டிய வழி. இந்த மாற்றத்தின் விளைவை நாம் அறிவியல்பூர்வமாக கண்காணிக்க வேண்டும். இந்த மாறுபட்ட வகைகொரோனா நம் நாட்டுக்கு வெளியே கண்டறிப்பட்டுள்ளது. இதன் மரபியல் குறித்து ஆராயும் இந்திய கொவிட்கூட்டமைப்பு(இன்சாகாக்) மூலம் கண்காணிக்க வேண்டும். இதுதான், இந்த அமைப்பில் உள்ள 28 ஆய்வு மையங்களின்எதிர்காலப் பணி. இந்த அமைப்பு இதை தொடர்ச்சியாககண்காணித்து ஆய்வு செய்யும். இந்த மாறுபட்ட கொரோனா, கட்டுப்பாடு நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைநமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த மாறுபட்ட கொரோனாவை, எந்த ஆயுதம் கொண்டும்அழிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை கண்காணித்து, அதன் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். இதில் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளின் அதே விதிமுறைகளும்அடங்கியுள்ளன. கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், எந்த வகை மாறுபட்ட கொரேனாவையும் சமாளிக்க முடியும். தொற்றுக்கு அடிப்படை காரணம், பரவல் சங்கிலிதான். இந்த பரவல் சங்கிலியை நாம் முறித்துவிட்டால், எந்த வகைமாறுபட்ட கொரோனா பரவலையும், நம்மால் கட்டுப்படுத்தமுடியும். இவ்வாறு டாக்டர் வி.கே.பால் கூறினார்.