சென்னையில் காயங்களுடன் மன நோயாளியாக சுற்றிய அசாம் இளைஞரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் காவல்த்துறை ஆணையர்

சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள  நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு  உதவ  ‘‘காவல் கரங்கள்‘‘ என்ற ஒருங்கிணைந்த உதவி மையம் பெருநகர காவல் கட்டுப்பாட்டறையில் 24×7 இயங்கி வருகிறது.இதன் மூலம் சென்னை பெருநகரில் உறவுகள் அற்ற நிலையில் இருப்பிடம் இல்லாமல் நோய்வாய் பட்டு உதவி வேண்டி இருந்து வரும் முதியோர், பெண்கள், சிறுவர்கள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்,காவல் கட்டுப்பாட்டு அறை துணை  ஆணையாளர் மேற்பார்வையில் பெண்கள் உதவி மைய எண். 1091,குழந்தைகள் உதவி மைய எண். 1098முதியோர்கள் உதவி மைய எண்.1253 அவசர அழைப்பு 100 என்ற எண்கள் மூலம் உதவி வேண்டி பெறப்படும் அழைப்புகள் மூலம் காவல்உதவி மையம் , காவல் கரங்கள் , அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, சாலையில் தவிக்கும் ஆதரவற்றோர், முதியோர் மற்றும் உடல் நலம்,மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை சென்னை பெருநகர காவல்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 12.5.2021 அன்று மாலை இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலம் கீழ்பகுதியில் சாலையோரமாக சுமார் 23 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு கால்களிலும் மிகுந்தபுண்களோடு நடக்க முடியாத நிலையில் இருந்தவரை மீட்டு உதவிட “காவல் கரங்கள்” உதவி மையத்தில் கிடைத்த தகவலின் மூலம் அன்பின்பாதை, கருணை உள்ளங்கள்என்ற தன்னார்வ தொண்டு  நிறுவன ஆர்வலர்கள்திரு.கிளமென்ட், திரு.செந்தில்குமார் மூலமாக மீட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உதவியற்ற நபருக்கு கால் காயங்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து அவரை “அன்பகம்” மனநல இல்லத்தில் காவல் கரங்கள் மூலம் ஒப்படைத்து உரிய சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டது. 

​​மேலும் சேர்க்கப்பட்ட நபரின் உடல் நிலை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் தொடர்ந்துகண்காணிக்கப்பட்டு உரிய கவனம் செலுத்தி சிகிச்சைக்கு பின் மேற்கண்ட நபர் உடல் நலத்துடன் நடக்க ஆரம்பித்தார். அதோடு மனநிலையும் சீரான முறையில் புரிதலுடன் வர ஆரம்பித்த நிலையில் அவரிடம் விசாரித்த போது,  அவர் பெயர் ஜாபர் அலி (எ)  மொஜாகர் அலிஎன்றும், தனக்கு 23 வயதாகிறது என்றும், திருமணமாகதவர் என்றும், தனது குடும்பம் அசாம் மாநிலத்தில் உள்ள பக்சா மாவட்டத்தில் பங்காலி பார்கா (Bangali Parka) என்ற ஊரில் இருப்பதாகவும், தனது குடும்பத்தில் அவரது அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, அனைவரும் இருப்பதாகவும் தெரிவித்தார். அவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் நாகர்கோவிலில் Silver Shop என்ற Steal shop ல் வேலை செய்வதற்காக 10 நபர்களுடன் வந்ததாகவும், அங்கு  அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு 2 கால்களில் முறிவு ஏற்பட்டு, அங்கு சிகிச்சை மேற்கொண்டிருந்த போது,உதவிட யாரும் இல்லாததால் மனநோயாளியாக ரயில் மூலம் அங்கிருந்து சென்னை எழும்பூர் வந்ததாகவும் அதன் பிறகு சென்ட்ரல் ரயில் நிலையம் போனது வரை நினைவு கூர்ந்து தகவல் கொடுத்தார். இவருடைய முகவரியை விசாரித்த போது அசாம் மாநிலம் Goteswar Police Station Limit  என தெரிந்து, அசாம் மாநிலத்தில் காப்பகம் நடத்தும் திரு.அப்துல் முகித் பின் ரவூப், சன்சுமா டேய்மாரிஎன்பவர்களிடம்  விசாரணை செய்து, அவர்களிடம் விபரம் பெற்று  ஜாபர் அலி (எ)  மொஜாகர் அலி அளித்த  முகவரியில் அவரது சகோதரர் இஸ்மாயில் அலிவசிப்பதும் அவருடைய கைபேசி எண்ணும் தெரியவந்தது.

  இன்று (17.6.2021) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள்முன்னிலையில் மீட்கப்பட்ட ஜாபர் அலி (எ) மொஜாகர் அலியை நல்ல முறையில் அவரது சகோதரர் இஸ்மாயில் அலி மற்றும்  அவரது குடும்பத்தினடரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது பயணத்திற்கான  ஆடைகள்,  உணவுபொருட்கள்  அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது. மேலும் ஜாபர் அலி (எ) மொஜாகர் அலியை, காவல் கரங்கள் உதவி மையத்துடன் இணைந்து மீட்டு தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க உதவிய தன்னார்வலர்கள் திரு.கிளமென்ட், திரு.செந்தில்குமார்மற்றும் அன்பக காப்பக இயக்குநர் திருமதி.ரபீயா ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தும் காப்பகத்திற்கு வேண்டிய உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். ஜாபர் அலி (எ) மொஜாகர் அலி குடும்பத்தினர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கும்,  காவல் துறைக்கும், காவல் கரங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்களுக்கும் மனதார நன்றி  தெரிவித்தனர். மேலும் சென்னை பெருநகர காவல் துறையின் காவல் கரங்கள் உதவி மையம் மூலம் கடந்த 15.3.2021 முதல் 17.6.2021 வரை 352 அழைப்புகள் மூலம்ஆதரவற்றோர், முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட 308 ஆண் மற்றும் பெண் நபர்களை மீட்டு, 260 நபர்களைகாப்பகத்தில் சேர்த்தும்,  18 நபர்களை   உரிய கலந்தலோசனைகள் நடத்தி குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தும், 24 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தும்,  6 காணமால் போன  நபர்கள் காவல் நிலையங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுகுடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்  சென்னை பெருநகர கூடுதல் காவல்ஆணையாளர் மருத்துவர் திரு.N.கண்ணன், இ.கா.ப, காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையாளர் திரு.G.ராமர், இ.கா.ப, நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் திருமதி.S.விமலா, திரு.K.ஶ்ரீதர் பாபு,மற்றும் காவல் அதிகாரிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.