அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பில்அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைவழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டுவருகிறதுஇத்திட்டத்தின்கீழ்  2021-2022 ஆம்  ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனவிண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2021 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்ஆண்டு வருவாய்ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்.  வட்டாட்சியர்அலுவலகத்தில்  இணைய வழியில் (ஆன்லைன்பெறப்பட்டவருமானச் சான்றுதமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள்மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்றுதமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன்இணைக்கப்பட  வேண்டும்.  இதற்கான விண்ணப்பப்படிவம்நேரிலோ  அல்லது தமிழ்  வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.comஇலவசமாகபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்இத்திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாகரூ.3500/-, மருத்துவப்படி ரூ.500/- வழங்கப்படும்.  விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்டாட்சியர்அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர்கள் / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணைஇயக்குநர் / மாவட்டத் தமிழ் வளர்ச்சி  உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக அனுப்பப்பட வேண்டும்.  சென்னைமாவட்டத்திலுள்ளவர்கள் இயக்குநர்தமிழ் வளர்ச்சிஇயக்ககம்,  தமிழ்ச்சாலைஎழும்பூர்சென்னை – 8 என்றமுகவரிக்கு நேரடியாக அனுப்பப்பெறலாம்விண்ணப்பங்கள்அனுப்ப வேண்டிய கடைசி நாள்31.8.2021.