தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொவிட்-19 தொற்று வகைகண்டறியப்பட்டுள்ள மதுரை, சென்னை மற்றும் காஞ்சிபுரம்மாவட்டங்களில் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசுஉடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் டாக்டர் வெஇறையன்புவிற்கு மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன்எழுதியுள்ள கடிதத்தில், டெல்டா பிளஸ், கவலை அளிக்கக்கூடியதொற்று வகை என்று மரபியலுக்கான இந்திய கொரோனாகூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளதை அடுத்து, அதனைக்கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாகமேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த வகைத் தொற்று, அதிகமாகப் பரவுவதுடன், நுரையீரலைபாதித்து, மோனோக்ளோனல் என்ற நோய் எதிர்ப்பொருளின் ஆற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டது என்று திரு பூஷன்கூறியுள்ளார். இது சம்பந்தமாக பொது சுகாதார நடவடிக்கைகள் மேலும்தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டங்கள் மற்றும் தொகுப்புகளில் கூட்ட நெரிசலைக்கட்டுப்படுத்துவது; தடமறிதல், தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்றநடவடிக்கைகள் முன்னுரிமையின் அடிப்படையில்மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திரு பூஷன் குறிப்பிட்டுள்ளார். மருத்துவத் தொற்று நோயின் தொடர்பை கண்டறிவதற்கு ஏதுவாகதொற்றுக்கு ஆளாகும் நபர்களின் போதிய மாதிரிகள்மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் சுகாதார செயலாளர், மாநில அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.