நட்பு நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பைமேம்படுத்தும் நோக்கில் தனது பயணத்தை ஜூன் 13 அன்றுதொடங்கியுள்ள இந்திய கடற்படை கப்பலான தபார், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்வேறுதுறைமுகங்களுக்கு செப்டம்பர் இறுதி வரை பயணம்மேற்கொள்ளும். இந்த பயணத்தின் போது, பணிரீதியான, சமூக மற்றும்விளையாட்டு நிகழ்ச்சிகளை தபார் நடத்தும். நட்புநாடுகளின் கடற்படைகளோடு கூட்டு பயிற்சிகளிலும்ஐஎன்எஸ் தபார் ஈடுபடும். ஏடன் வளைகுடா, செங்கடல், சூயஸ் கால்வாய், மெடிட்டெரேனியன் கடல், வட கடல் மற்றும் பால்டிக் கடல்ஆகிய பகுதிகளை தனது பயணத்தின் போது ஐஎன்எஸ்தபார் கடந்து செல்லும். டிஜிபவுட்டி, எகிப்து, இத்தாலி, பிரான்சு, இங்கிலாந்து, ரஷ்யா, நெதர்லாந்து, மொராக்கோமற்றும் ஆர்க்டிக் கவுன்சில் நாடுகளான சுவீடன் மற்றும்நார்வே ஆகியவற்றின் துறைமுகங்களுக்கும் தபார்பயணம் மேற்கொள்ளும். தான் பயணம் மேற்கொள்ளும் நாடுகளின்கடற்படைகள் உடனான நிகழ்ச்சிகளை தவிர, ராயல்கடற்படை, பிரான்சு கடற்படை மற்றும் ரஷ்ய கூட்டமைப்புகடற்படை ஆகியவற்றுடன் கூட்டு பயிற்சிகளிலும்இக்கப்பல் ஈடுபடும். ஜூலை 22 முதல் 27 வரை ரஷ்யகடற்படை தின கொண்டாட்டங்களிலும் ஐஎன்ஸ் தபார்கலந்து கொள்ளும். ராணுவ உறவுகள், கூட்டு செயல்பாடு மற்றும் நீண்டகாலதிட்ட நீட்டிப்பு உள்ளிட்டவற்றை கட்டமைப்பதற்காக நட்புநாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து இக்கப்பல்செயல்படும்.