அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் படிசமுதாயத்தையும் நாட்டையும் கட்டமைப்பதில் நமது வெற்றிஇருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத்கோவிந்த் கூறினார். இந்த திசையில் நாம் முன்னேறிஇருக்கிறோம் என்று கூறிய அவர், ஆனால் செல்ல வேண்டியதூரம் இன்னும் இருக்கிறது என்றார். லக்னோவில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு மற்றும்கலாச்சார மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில்இன்று (2021 ஜூன் 29) பேசிய அவர், அம்பதேகரின்பன்முகத்தன்மை மற்றும் தேசத்தை கட்டமைப்பதில் அவரதுபங்கு ஆகியவை அவரது மிகச்சிறந்த திறன் மற்றும்திறமையை வெளிப்படுத்தியதாக கூறினார்.
அம்தேகர் ஒரு கல்வியாளர், பொருளாதரம் மற்றும்நீதித்துறை நிபுணர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், சமூகவியலாளர், சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்ல, கலாச்சாரம், மதம் மற்றும் ஆன்மிகத் துறைகளிலும்மிகச்சிறந்த பங்காற்றி உள்ளார். நியாயம், சமதர்மம், சுயமரியாதை மற்றும் இந்தியத்தன்மைஆகியவை பாபாசாகேப்பின் நான்கு முக்கிய லட்சியங்களாகதிகழ்ந்ததாக குடியரசுத் தலைவர் கூறினார். அவரதுசிந்தனைகள் மற்றும் செயல்களில் இவை வெளிப்பட்டன. புத்தரின் செய்திகளை டாக்டர் அம்பேத்கர் பரப்பினார். கருணை, தோழமை, அகிம்சை, சமதர்மம் மற்றும் பரஸ்பரமரியாதை போன்ற இந்திய விழுமியங்களை மக்களிடையேஎடுத்து சென்று, சமூக நீதியின் லட்சியத்தை அடைய அவர்முயற்சித்தார். பெண்களுக்கு சம உரிமை வழங்க பாகாசாகேப் என்றும்வாதிட்டார் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அவர்இயற்றிய அரசமைப்பில் ஆண்களுக்கு சமமான அடிப்படைஉரிமைகள் பெண்களுக்கும் இருந்தன. சொத்து, திருமணம்மற்றும் வாழ்க்கையின் இதர விஷயங்களில் சமஉரிமைகளை வழங்க தனி சட்டம் மூலம் தெளிவான சட்டஅடித்தளம் வழங்கப்பட வேண்டும்