கஞ்சா வியாபாரியை கைது செய்த காவலரை ஆணையர் பாராட்டினார்

16 நசரத்பேட்டை காவல் நிலையதலைமைக்காவலர்    T.சீனிவாசன் (த.கா.35312) என்பவர் (1.7.2021காலை 10.15 மணியளவில்  நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டபாப்பான் சத்திரம்ெங்களுர் தேசிய நெடுஞ்சாலைசிவன்கோயில் அருகே ரோந்து சென்று கொண்டிருந்த போதுஅங்குஇருசக்கர வாகனத்துடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்த போதுஅவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனை செய்த போதுகஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில்இருவரையும் கைது செய்து  T-16 நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.T-16 நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்டநபர்கள் 1.தேவேந்திர நாத்கொகோய், , வ/31,  த/பெ.அகன்சந்திரகொகோய், சன்டியா தாலுக்காடின்சுகியா மாவட்டம்அஸ்ஸாம் 2.அன்டார்யாமி மஹாலிக், வ/23, த/பெ.பிரபாகர்மஹாலிக்கல்யாண்பூர்பலேஸ்வர்ஓடிசா மாநிலம்  ஆகியஇருவரை கைது செய்தனர்அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாரொக்கம ூ.1,24,320/-3 செல்போன்கள்மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மேற்படிஇருவரும  நசரத்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ளபகுதிகளில் கஞ்சா  விற்பனை செய்தது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டுநீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.  ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு கஞ்சாவிற்பனை செய்த  வெளிமாநில குற்றவாளிகளைகைது செய்த T-16 நசரத்பேட்டை காவல்நிலைதலைமைக்காவலர் T.சீனிவாசனை,  சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்இ.கா.ப., அவர்கள் 02.7.2021 நேரில் ழைத்து பாராட்டிவெகுமதி வழங்கினார்.