நடிகர் ஆரி அர்ஜுனன் தனது மனைவி நாதியாவின் பிறந்தநாளை நேற்று இரவு மிக எளிமையாக கொண்டாடினார். இதில் நதியாவிற்க்கு சர்ப்ரைஸாக இருக்க நதியாவின் நண்பர்களை ஆரி அருஜுனன் அழைத்திருந்தார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணத்தில் வந்த எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாம் தாங்கிக்கொண்டு தன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு இந்த பிறந்தநாளை கொண்டாடி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தேன் அதனால் நதியாவின் நண்பர்களையும் நதியாவிற்கு தெரியாமல் சார்பாக இந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வைத்தேன். அதேபோல் எனது சில நண்பர்களும் இன்ப அதிர்ச்சியாக வந்து கலந்து கொண்டார்கள்.
அவர்களுக்கெல்லாம் சுயமாக (டெம்பரேச்சர்) பரிசோதனை செய்த பின்பே இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள். இப்படி எனது மனைவியின் பிறந்தநாளில் நேரிலும் அலைபேசி வாயிலாகவும் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் உலகெங்கும் இருந்து என் மனைவியின் பிறந்தநாளை தனது சமூக வலைதளத்தின் மூலம் கொண்டாடிய மற்றும் வாழ்த்துக் கூறிய என் ரசிகர்களாகிய அனைத்து சொந்தங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்