சென்னை பெருநகர காவல், T-15 SRMC போக்குவரத்துகாவல் நிலைய தலைமைக் காவலர்கள் P.லிங்ககுமார்(த.கா.35800) மற்றும் M.பேச்சிமுத்து (த.கா.26828) ஆகியோர் கடந்த 06.07.2021 அன்று இரவு சுமார் 9.15மணியளவில் போரூர் செட்டியார் அகரம் சிக்னலில்போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிக்னலில் நின்று கொண்டிருந்த TN 12 AF 1983பதிவு எண் கொண்ட Swift Tour காரிலிருந்த ஒருவர்,போலீசாரை கண்டதும் காப்பற்றுங்கள் என கூறிகத்தியுள்ளார். சுதாரித்துக்கொண்ட போக்குவரத்துதலைமைக்காவலர்கள் லிங்க குமார், பேச்சி முத்து ஆகியஇருவரும் மேற்படி காரை வழிமறித்து மடக்கி பிடித்துவிசாரணை செய்தனர். விசாரணையில் ரியாஷ் அலி, வ/39, த/பெ.சையதுஇப்ராஹிம், எண்.4, ஐசக் நகர், பட்டூர், மாங்காடுஎன்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மாங்காடு, பரணிபுத்தூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மேற்படி காரில் வந்த 3 நபர்கள், ரியாஷ் அலியைகாரில் வலுக்காட்டாயமாக ஏற்றி கடத்தி வந்ததுதெரியவந்தது. அதன் பேரில் ரியாஷ் அலியை போலீசார்பத்திரமாக கடத்தல்காரர்களிடமிருந்து மீட்டனர். கடத்தல்சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்து T-15 SRMC காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். T-15 SRMCகாவல் நிலைய போலீசார் கடத்தல் சம்பவம் நடைபெற்றஇடம் T-14 மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குற்றவாளிகள் மூவரையும் T-14 மாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
T-14 மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில்பிடிப்பட்ட நபர்கள் 1.ராஜா, வ/31, த/பெ.கோபால், எண்.106, சின்னாண்டிபட்டி கிராமம், காளையாபட்டி அஞ்சல், கரூர்மாவட்டம் 2.சுரேஷ், வ/38, த/பெ.தேவராஜ், எண்.25, நாகாத்தம்மன் தெரு,எம்.ஜி.ஆர் நகர், சென்னை கார்ஓட்டுநர் 3.சரவணன், வ/42, த/பெ.மாரிமுத்து, எண்.8, வள்ளுவர் தெரு, வீரராகவபுரம், மேல்பாக்கம், சென்னைஎன்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கத்தி, 1 இரும்புராடு, 3 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல்செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கடத்தப்பட்ட ரியாஷ் அலி,தனது நண்பரான தர்மராஜா என்பவரிடமிருந்து கடன்வாங்கிய ரூ.30,000/-ஐ திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜா தனதுநண்பர்களான ராஜா, சுரேஷ், சரவணன் ஆகியோர்உதவியுடன் ரியாஷ் அலியை கடத்தி கடன் தொகையைதிரும்ப கேட்டு மிரட்டியுள்ளது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்அடைக்கப்பட்டனர். தலைமறைவாகியுள்ள தர்மராஜாவைதனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
பணியில் விழிப்புடன் செயல்பட்டு காரில் கடத்திசெல்லப்பட்ட நபரை மீட்டு கடத்தல் குற்றவாளிகளை கைது செய்த T-15 SRMC போக்குவரத்துகாவல் நிலைய தலைமைக் காவலர்கள் திரு.P.லிங்ககுமார்(த.கா.35800) மற்றும் திரு.M.பேச்சிமுத்து (த.கா.26828) ஆகிய இருவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று(08.07.2021) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதிவழங்கினார்.