நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார செவிலியர்கள் பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகின்றது. மேலும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான ஆய்வு கூட்டமும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வுக்கூட்டங்களின் போது பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் உயர பிறப்பு வரிசை மகப்பேறு மரணம் சிசு மரணம் தடுப்பூசி பணிகள் பிக்மி அறிக்கை குறித்து மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அங்கன்வாடி பணியாளா;கள் கிராம சுகாதார செவிலியர்களுடன் இணைந்து கர்ப்பிணி பெண்கள் குறித்த முழுமையான விவரங்களை பதிவு செய்ய உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு கர்ப்பிணித் தாய்மார்கள் குறித்த விவரங்கள் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கர்ப்பிணித் தாய்மார்களின் உறவினராக வரும் கர்ப்பிணி தாய்மார்களையும் பிக்மி பதிவு செய்து அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் தொடர் கவனிப்பும் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சமூக நலத்துறையின் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தையுடன் அல்லது இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை பின்பற்றியவர்களுக்கு ரூ.50000 நிதி வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது. அங்கன்வாடி பணியாளர்கள் கிராம செவிலியர்கள் மூலம் பெண் குழந்தைகளின் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு நலக்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு விடுபடாமல் தடுப்பூசி வழங்க மாவட்ட ஆட்சித் தலைவரால் அறிவுறுத்தப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தகைய நடவடிக்கைகளுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் ஆண் பெண் குழந்தை பிறப்பு விகிதங்கள் குறைந்தால் அது குறித்து மருத்துவர்கள் செவிலியர்களிடம் விளக்கம் பெறப்படுவதுடன் அப்பகுதியில் உள்ள ஊடுறுவி மையங்கள் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
ஊடுறுவி மையங்கள் சுகாதாரத்துறையின் மருத்துவக் குழுவினரால் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. 2017 – 2018ல் மத்திய அரசு மூலம் அறிவிக்கப்பட்ட பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்ப்பிப்போம் திட்டத்தில் சுகாதாரத்துறை சமூகநலத்துறை பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் மூலமாக எடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் முக்கியதுவம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் பெண் குழந்தைகளை பெற்ற தம்பதிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் சிறப்பிக்கப்பட்டார்கள். இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக 2014 – 2015 ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் 867 ஆக இருந்த பெண் குழந்தை பிறப்பு விகிதம் 2018 – 2019ஆம் ஆண்டில் 935 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாராட்டும் வகையில் டில்லியில் (06.09.2019) நடைபெற்ற விழாவில் மாண்புமிகு மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி இராணி அவர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப. அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி சிறப்பித்தார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை மேம் படுத்தியதற்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் வழங்கிய பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப. அவர்கள் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா அவர்கள் ஆகியோரிடம்டம் 07.09.2019 காண்பித்து பாராட்டும் வாழ்த்தும் பெற்றார்