கர்நாடக அரசு கட்டும் மேகதாது அணை விவகாரம் குறித்து தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சிக் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின்
சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து கூட்டத்தின் பின் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர்
டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
காவிரி நடுவர்மன்ற தீர்பை கர்நாடக மதிக்காதபோது நாம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன் அடிப்படையில் முதல்வராக இருந்த எடப்பாடியார் அரசு அன்றைக்கு கடுமையான அளவுக்கு சட்டப்போராட்டம் நடத்தி காவிரி நதிநீருக்கு காவிரி மேலாண்மை வாரியமும்,அதுபோல ஒருங்காற்று குழு அமைப்பதற்கும், பெருமளவுக்கு உரிமையை நிலைநாட்டியது அம்மாவின் அரசு.2014-15 ஆம் ஆண்டு இதே மேகதாது பிரச்சனை அன்றைக்கு வந்தபோது 25 கோடி ரூபாய் செலவு செய்து கர்நாடக அரசு அணை கட்டலாம் என்று அனுமதி கேட்டப்போது அன்றைக்கு அம்மாவின் அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி 2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சென்றார். எப்படி காவிரி பிரச்சனைக்கு அம்மாவின் அரசு நடவடிக்கை எடுத்ததோ அந்த அடிப்படையில் தற்போதைய தமிழக அரசும் சட்டப்போராட்டங்களும்,அரசியல் ரீதியான நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என்று சொல்லி தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கழகத்தின் ஆதரவு உண்டு தெரிவித்துள்ளோம். இதில் விவசாயிகளின் நலன்,தமிழகத்தின் ஜீவாதாரநலன், ஆகியவற்றை கருத்தில்கொண்டு நீங்கள் எடுக்கின்ற
ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு எங்களுடைய ஆதரவு உண்டு என்று தெரிவித்துள்ளோம். இந்த கூட்டத்தில் மூன்று தீர்மானங்களை
நிறைவேற்றியுள்ளார்கள். அனைத்து கட்சிகளின் கருத்துக்களின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.எங்களை பொறுத்த வரையில் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வே. ண்டிய அவசியம் கிடையாது.தமிழ்நாட்டின் நலன் காவிரி நலன்,டெல்டா நலன்,ஆகியவற்றை மையப்படுத்தி தமிழக அரசு எடுக்கும் சட்டப்போராட்டங்களின் அடிப்படையில் ஆதரவு தருவோம். நடுவர் மன்றமே உச்ச நீதிமன்றத்திற்கு இணையானது.எனவே நடுவர் மன்றம் அமைத்த பிறகு இதுபோன்ற கர்நாடகத்தின் செயல் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.கர்நாடக மாநிலத்திற்கு கண்டனத்தை
தெரிவிக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளோம். நீதிமன்ற அவமதிப்பை
உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவித்துள்ளோம். காவிரி பிரச்சனையில் உரிமையை நிலைநாட்டிய பெருமை கழகத்திற்கு உண்டு. இதுபோன்ற நிலையில் தமிழக அரசு செய்வார்கள் என். நம்பிக்கை உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.பல வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் தெரிவித்தார்கள்.இதுவரை நிறைவேற்றவில்லை. இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.