டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை அமைச்சர் அனுராக்தாக்கூர் வெளியிட்டார்

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய அணியை உற்சாகப் படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ பாடலை காணொலி மூலம் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் வெளியிட்டார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் திரு நிசித் பிரமானிக்இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் திரு நரீந்தர் பத்ராஇந்திய ஒலிம்பிக் சங்க தலைமை செயலாளர் திரு ராஜீவ் மேத்தாஇந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு சந்தீப் பிரதான் மற்றும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் தலைமை செயல் அதிகாரி கமாண்டர் ராஜகோபாலன்

ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்துஸ்தானி வழி‘ என்று தலைப்பிடப்பட்ட இந்த பாடலுக்கு புகழ்பெற்ற இந்திய இசைக் கலைஞரான ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இளம் பாடகி அனன்யா பிர்லா பாடியுள்ளார். கடினமான நேரங்களில் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள கலைஞர்களை திரு அனுராக் தாக்கூர் பாராட்டினார்.  ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அனன்யா பிர்லா ஆகியோருக்கு இந்த முயற்சிக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிணைந்து பணிபுரிவதற்கு கடினமான இந்த கொரோனா காலகட்டத்தில்உணர்ச்சி ததும்பும் இந்த பாடலை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியாவுக்காகவும் இந்திய அணிக்கு உற்சாகம் அளிப்பதற்காகவும் அவர்கள் இதைச் செய்துள்ளனர். இந்த பாடலை எந்த அளவு முடியுமோ அந்தளவு பகிருமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று திரு தாக்கூர் கூறினார்.   டோக்கியோவிற்கு செல்லும் வீரர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் உற்சாகம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அறைகூவலை வலுப்படுத்துவதற்கான மற்றுமொரு முயற்சியாக இந்த பாடல் அமைந்துள்ளதாக திரு நிசித் பிரமானிக் கூறினார்.  டோக்கியோவிற்கு செல்லும் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்க #Cheer4India என்ற பிரச்சாரத்தை மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கினார். இதற்கு ஒட்டுமொத்த நாடும் முழு மனதுடன் ஆதரவளித்து வருகிறது. இந்த பிரமாதமான பாடலுக்காக இசைமேதை ஏ ஆர் ரஹ்மானுக்கும்இளம் கலைஞர் அனன்யா பிர்லாவுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.