மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கப்பேரவை – “நம்மவர் தொழிற்சங்கப்பேரவை”துவக்க விழா, நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் கர்ம வீரர் காமராஜர் 119வது பிறந்த நாள் விழா இன்று (15.07.2021) நமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தலைவர் நம்மவர். டாக்டர் திரு. கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தொழிற்சங்க பேரவையின் பெயரை அறிவித்து, நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். பின், தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க பேரவையின் கொடியை ஏற்றினார்.
- அத்துடன் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு 119 நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகினார். இவ்விழாவில் “நம்மவர் தொழிற்சங்கப்பேரவை” தலைவர் திரு. சு.ஆ. பொன்னுசாமி அவர்கள், பொதுச் செயலாளர்கள் திரு. A.G. மௌரியா, திரு. R. தங்கவேலு, அரசியல் ஆலோசகர்கள் திரு. V. பொன்ராஜ், திரு. பழ. கருப்பைய்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். முடிவாக, தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் பேருரையாற்றினார்.