இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 10.09.2019 அன்று வருகை தந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு சி.என்.மகேஸ்வரன்,இ.ஆ.ப., அவர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோக திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சி.என்.மகேஸ்வரன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 429 ஊராட்சிகள், 2307 குக்கிராமங்கள் உள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 80 ஆடுனு அளவில் குடிநீர் தேவை கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட 49 கிராம கூட்டு குடிநீர் விநியோக திட்டங்களின் மூலமாக நாளொன்றுக்கு சராசரியாக 33 ஆடுனு முதல் 36 ஆடுனு வரையில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள குடிநீரானது ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் அந்தந்த கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள திறந்தவெளிக் கிணறு, ஆழ்துளை கிணறு போன்ற பல்வேறு குடிநீர் ஆதாரங்கள் மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 49 கிராம கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீர் நிலை குறித்து கள ஆய்வு செய்வதற்காக பிற மாவட்டங்களைச் சார்ந்த உதவி செயற்பொறியாளர்கள், உதவி
பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 32 குழுக்கள், குழுவுக்கு தலா இரண்டு பொறியாளர்கள் வீதம் 64 பொறியாளர்கள் கள ஆய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வுக்குழுவினர் ஏறத்தாழ 2,303 ஊரக குடியிருப்புகளில் ஆய்வு செய்து, குடிநீர் வழங்கும் நிலை குறித்து வகைப்படுத்தி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
அதேபோல குடிநீரின் தரம் குறித்து பரிசோதனை செய்வதற்காக 3 இளநிலை மற்றும் உதவி நீர் பகுப்பாளர் குழுக்கள் மூலம் 106 குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்திறனை மேலும் அதிகரித்திடவும், தேவைக்கேற்ப புதிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கிட ஏதுவாக வறட்சி நிவாரணத் திட்டம் மற்றும் பழமைவாய்ந்த திட்டத்தினை புனரமைப்பு செய்தல் ஆகிய திட்டங்களின் கீழ் ரூபாய் 7.58 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப்பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன இப்பணிகள் அனைத்தையும்
விரைவாக நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தொpவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.த.கெட்சி லீமா அமலினி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் திரு.ரமேஷ்பாபு, தலைமை பொறியாளர் திரு.ராமச்சந்திரன், செயற்பொறியாளர்கள் திரு.ஜி.சண்முகநாதன், திரு.சி.கிhPஷ்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர்
திரு.வீ.கேசவதாசன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.