செங்கல்பட்டு, ஜூலை. 18: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், நங்கநல்லூர், ஆலந்தூர், கோவூர், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 12 வழித்தடங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட மற்றும் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் என மொத்தம் 17 பேரூந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நங்கநல்லூரில் இருந்து தடம் எண்கள் 52K (நங்கநல்லூர் – பிராட்வே), 78N (நங்கநல்லூர் – கோயம்பேடு), M18C (கீழ்கட்டளை – தி.நகர், நங்கநல்லூர் வழியாக) 576 (மவுண்ட் மெட்ரோ – தி.நகர்) ஆகிய வழித்தடங்களிலும், அய்யப்பன்தாங்கல் பணிமனையில் இருந்து தடம் எண்கள் 166 (அய்யப்பன்தாங்கல் – தாம்பரம்), 88C (தண்டலம் – பிராட்வே), 188C (குன்றத்தூர் – பிராட்வே), 188A (குன்றத்தூர் – தி.நகர்), S165 (கோவூர் E.B. – பல்லாவரம்), S166 (மணிமேடு – போரூர்), S40 (இந்திரா நகர் – பல்லாவரம்) ஆகிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந் நிகழ்வில், ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன், மாநிலக்கலவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.