சாக்‌ஷி அகர்வால் நடிக்கும் திகைப்பூட்டும் திரைப்படம் ‘தி நைட்’

Good hope பிக்சர்ஸ் சார்பாக கோகுலகிருஷ்ணன் கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும்
தமிழ் திகைப்பூட்டும் திரைப்படம் “தி நைட்” இத்திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ரங்கா புவனேஷ்வர். திரைப்படத்தின் ஒளிப்பதிவை ரமேஷ் குணசேகரன் கவனிக்க சியான்‌ ஶ்ரீகாந் எடிட்டிங் செய்கிறார். அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார். நாயகனாக விது  நடிக்க நாயகியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அவகர்வால் நடிக்கிறார். மிகமுக்கியமான வேடத்தில் மதுமிதாநடிக்கிறார். வில்லனாக பாலிவுட்டில் இருந்து ரன்வீர்குமார் தமிழில் அறிமுகமாகிறார்.
இன்னிலையில் படப்பிடிப்பு குழுவினருடன் கேரளா மாநிலத்தில் குடுங்காட்டுபாறா எனும் அடர்ந்த வனப்பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் தன் பிறந்த நாளை தயாரிப்பாளர் கலாசா செல்வம் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்  நடிகை சாக்க்ஷி அகர்வால்.
மக்கள் தொடர்பு: ஜான்.