இன்மை என்ற சொல்லின் பொருள் பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதை குறிக்கும். நவரசா திரைப்படத்தில் பயத்தின் உணர்வை மையமாக கொண்டு உருவாகியுள்ள “இன்மை” படத்தை, இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் உருவாக்கியுள்ளார். Netflix ல் வரவிருக்கும் ஒன்பது பகுதி ஆந்தாலஜி திரைப்படமான, நவரசாவின் ஒரு பகுதியாக உருவாகியுள்ள “இன்மை” படத்தில், தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் சித்தார்த், தனது நடிப்பால், பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்துள்ளார். தமிழின் மிக முக்கிய ஆளுமைகள் ஒன்றிணைந்து ‘நவரசா’ திரைபடத்தினை உருவாக்கியுள்ளனர். “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது. இன்மை பகுதி குறித்து நடிகர் சித்தார்த் கூறியதாவது… மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திரா அவர்கள் எனக்கு ‘இன்மை ’ வாய்ப்பை வழங்கியபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். நவரசங்களில் ஒரு உணர்வை குறிக்கும் இன்மை என்பதின் அர்த்தம், பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதாகும். இன்மை என்ற வார்த்தையைக் கேட்கும்போதே மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். COVID ஆல் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள, திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாக, இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் மற்றும் நடிகை பார்வதி திருவோத்து ஆகிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு அற்புதமான அனுபவம் என்றார். மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் “நவரசா” ஆந்தாலஜி படத்தினை Madras Talkies மற்றும் Qube Cinema Technologies இணைந்து தயாரித்துள்ளனர். “நவரசா” Netflix தளத்தில் பிரத்தியேகமாக வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது. Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும்