சென்னை பெருநகர காவல்துறையில்பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால்இ.கா.ப., அவர்கள் அறிவுரைப்படிசென்னைபெருநகர காவல்துறையில் கொரோனா நோய் தொற்றுகாலத்தில் அர்ப்பணிப்புடன் தன்னுயிரை பொருட்படுத்தாமல்பணியாற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பல்வேறு நலத்திட்டங்கள்நடைமுறைபடுத்தப்பட்டுமுகக்கவசங்கள்திரவசுத்திகரிப்பான்கையுறை உள்ளிட்ட கொரோனா தடுப்புஉபகரணங்கள் வழங்கியும், கொரோனா பரவாமல் தடுக்ககொரோனா விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்கள்நடத்தப்பட்டும் ரப்படுகிறது.  

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுபெங்களூரில் இயங்கி வரும் Sillicon Valley Bank (SVB) நிர்வாகத்தினர்கொரோனா தொற்று காலத்தில் மிகுந்தஅர்ப்பணிப்புடன் களப்பணியாற்றி வரும் சென்னை பெருநகரகாவலில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர் மற்றும் அவரதுகுடும்பத்தினருக்கு N95 முகக்கவசங்கள்கையுறைகள்திரவசுத்திகிரிப்பான்ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளிட்டரூ.3,000/- மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்கள்வழங்க முன் வந்தனர்.

அதன் தொடக்கமாகஇன்று (24.7.2021), காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்5,000 காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கியதொகுப்பு வழங்குவதின் அடையாளமாக சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்இ.கா.ப., அவர்கள்,15 காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குடாக்டர்.கலாநிதி வீராசாமிவட சென்னை பாராளுமன்றஉறுப்பினர் மற்றும் Sillicon Valley வங்கியின் இந்தியமனிதவள இயக்குநர் திருமதி.ஷாலினி பொடார்முன்னிலையில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கியதொகுப்பினை வழங்கினார்கள்.

உடன்சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்(தலைமையிடம்முனைவர் ஜெ.லோகநாதன்இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்திரு.மகேந்திரன், மேற்படிதனியார் வங்கி அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள்கலந்து கொண்டனர்.