இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்

அர்-ரஹ்மான் இஸ்லாமிக் தக்வா செண்டரும் சங்கர நேத்ராலாயா கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமை சென்னை குரோம்பேட்டையில் நடத்தியது.

 

முகாமிற்கு பேராசிரியர் ஷாகூல் ஹமீது தலைமை தாங்கினார். முகம்மது இப்ராஹீம் முன்னிலை வகித்தார். முகாமை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக இ.ஜோசப் அண்ணாத்துறை, ஜி.நரேந்திரா, என்.முஹம்மது காசீம், எஸ்.கே.ஷேக் சித்திக், ஏ.நாசர், சா.முஜிபுர் ரஹ்மான், எம்.ஏ. சாதிகுல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

செய்தியாளர்: ஷாஜஹான்.