வட இந்திய பெருங்கடலில் சூறாவளி புயல் அதிகரிக்கிறது

கடந்த 40 ஆண்டு காலமாகவடஇந்திய பெருங்கடல்பகுதியில் சூறாவளிப் புயல்களின் தீவிரம் அதிகரித்துவருவதாகஇந்திய விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வுகூறுகிறதுசமூக பொருளாதார பாதிப்புகளுடன் கூடியஇந்த அதிகரிப்புக்குஅதிக ஈரப்பதம்குறிப்பாகவளிமண்டலத்தில்,  பலவீனமான செங்குத்து காற்றுமற்றும்சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை போன்ற வளிமண்டல அளவுருக்கள்தான் காரணம்இது,  சூறாவளியைஅதிகரிக்கும் போக்கை கொண்டு வருவதில் புவிவெப்பமயமாக்கலின் பங்கை குறிக்கிறதுபுவிவெப்பமயமாவதன் காரணமாகஉலக கடற்பரப்புகளில்சூறாவளியின் தீவிரம் அடிக்கடி அதிகரிப்பதுகவலையளிக்கும் விஷயமாக உள்ளதுவடஇந்தியபெருங்கடல்பகுதியில்அதி தீவிர புயல்கள் அடிக்கடிஉருவாவதுகடலோர பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஆபத்துமற்றும் பாதிப்பை ஏற்படுத்துகிறதுபருவநிலை மாற்ற திட்டத்தின் கீழ்வட இந்தியப்பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளி செயல்பாட்டில்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் ஓட்டம் மற்றும் எல் நினோதெற்கு அலைவு (ENSO) ஆகியவற்றில் முக்கியமானவளிமண்டல அளவுருக்களின் பங்கு மற்றும் செல்வாக்குகுறித்து  காரக்பூர் ஐஐடி கடல் பொறியில் துறை மற்றும்கடற்படை கட்டிடக்கலை விஞ்ஞானிகள் ஜியா ஆல்பர்ட்அதிரா கிருஷ்ணன் மற்றும் பிரசாத் கே.பாஸ்கரன் ஆகியோர்வேலூர் விஐடி பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மைமையத்தின் கே.எஸ்.சிங் மற்றும் மத்திய அரசின் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து ஆய்வுமேற்கொண்டனர்.  ஆற்றல் சிதைத்தல் குறியீடு (Power Dissipation Index ) என்றழைக்கப்படும் வெப்பமண்டலசூறாவளிகளின் அழிவு ஆற்றலுக்கான அளவுகோலுடன்,  கணிசமான தொடர்பை நிரூபித்த இந்த ஆராய்ச்சிசமீபத்தில் ‘கிளைமேட் டைனமிக்ஸ்’ என்ற தலைப்பில் ஸ்பிரிங்கர்  என்ற இதழில் வெளியிடப்பட்டது.  குறிப்பாகஇந்த வெப்ப மண்டல சூறாவளிகள்பருவமழைக்குமுந்தைய காலத்தில் ஏற்படும் போக்கு அதிகரித்துள்ளது2000ம் ஆண்டுக்கு பின்பு வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிகள் அதிகரிக்கும் போக்குகாணப்பட்டதுவலுவான நடுத்தர அளவிலான  ஈரப்பதம் , நேர்மறையானகுறைந்த அளவிலான  சுழல்நிலை , பலவீனமான செங்குத்துகாற்று , சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை  மற்றும்அடக்கப்பட்ட வெளிச்செல்லும் நீண்ட அலை கதிர்வீச்சு ஆகியவை வட இந்தியப் பெருங்கடலில் அதிகரித்தவெப்பமண்டல சூறாவளி அதிகரித்ததற்கு காரணம் எனஇந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதுஇந்த ஆய்வின் புதிய கண்டுபிடிப்புகள்வட இந்தியபெருங்கடல் பகுதியில் வெப்பமண்டல சூறாவளிகளின்செயல்பாட்டில் மேம்பட்ட ஆராய்ச்சியை அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.