2020 – 21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது

கொரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் வருமானம் சரியத் தொடங்கி விட்டது. முந்தைய ஆட்சியில் பெறப்பட்ட கடனால் ஏற்பட்ட சிக்கல்களை விளக்கியுள்ளேன்” *வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு. ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை தயார் செய்யப்பட்டது. தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம்.மற்ற வெள்ளை அறிக்கைகளை விட கூடுதல் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனாவை தடுப்பதில் கவனம் செலுத்தினோம்* தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ₨1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் பொது சந்தா கடன் மட்டும் 2,63,976 ஆக இருக்கிறது. தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்துவிட்டது.தமிழக அரசின் கடன் சுமை ₹5.24 லட்சம் கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ 61320 கோடி* இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டது இல்லை* தமிழ்நாடு அரசு கடன் மீதான ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துகிறது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்