உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (13.08.2021) ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்“ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப.,
12 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர்
உத்தரவின்படி மாவட்டந்தோறும் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள்; தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் வகையில்  ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற ஒரு புதிய துறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டதின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 6,630 மனுக்கள் பெறப்பட்டு 6,072 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம்; ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்“ திட்டத்தின்; கீழ் தையல் இயந்திரங்கள் வேண்டி விண்ணப்பித்த 12 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. இப்பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கி உதவிடும் நோக்கில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமரலிங்கம்
5 தையல் இயந்திரங்களையும் திருவாடனை ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் திரு.பா.முகமது முக்தார் அவர்கள் 2 தையல் இயந்திரங்களையும் பாம்பன் நேசக்கரங்கள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் கடல் ஓசை பண்பலை நிறுவனம் 5 தையல் இயந்திரங்களையும் தன்னார்வமாக தங்களது சொந்த நிதியிலிருந்து மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு வழங்கி பங்களிப்பு செய்துள்ளார்கள். இத்தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப.,
பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) திருமதி.வ.ஜெயந்தி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.கீதா ஜீவானந்தம் உட்பட அரசு அலுவலர் உடன் இருந்தனர்.