நடப்பாண்டு தமிழகத்தின் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு முதன்முறையாக தாக்கல் செய்த காகிதமற்ற டிஜிட்டல் பட்ஜெட்டில், கொரோனா சமயத்தில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகளைசீர்செய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் குறைவாகஇருப்பதாகவே தெரிகிறது. தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைப்பு, சிங்காரச்சென்னை 2.0 திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும்திட்டம், மதுரையில் மெட்ரோ அமைக்க ஆய்வு, தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் டைடல் பூங்கா அமைப்பு, தொல்லியல் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு, சட்டமன்ற தொகுதிமேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு என்பது உள்ளிட்ட சிலவரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், தமிழகத்தின்நிதிநிலையை சீரமைப்பதற்கான செயல்திட்டங்கள் குறித்தமக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றே சொல்லலாம். வெள்ளை அறிக்கையில் அரசுப்பேருந்து 1 கி.மீ ஓடினால் ரூ.59நஷ்டம் ஏற்படுகிறது என அறிவித்துவிட்டு, தற்போது பட்ஜெட்டில்1000 பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.623.59 கோடி ஒதுக்கியதுநியாயமாக தெரியவில்லை. நிதிநிலையை சீர்செய்யஇருப்பவர்களிடம் வரி பெற்று இல்லாதவர்களிடம் சேர்ப்போம் எனஅறிவித்து, அதற்கான செயல்திட்டங்களை பட்ஜெட்டில்முன்வைக்காதது ஏன் என புரியவில்லை. ஏற்கெனவே நாங்குநேரிதொழில்நுட்பபூங்கா செயல்படாதநிலையில், மீண்டும்நெல்லையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்என்ற அறிவிப்பு ஏற்புடையதா என்ற கேள்வி எழுகிறது. வெள்ளை அறிக்கைக்கும், பட்ஜெட் தாக்கலுக்கும் இடையேயானவேறுபாடுகளை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். இன்றுதாக்கல் செய்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க சாராம்சங்கள்இருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமான அறிவிப்புகளை வெளியிட்டு இன்னும் சிறப்பாகஅமைத்திருக்கலாம். இருப்பினும், தமிழக அரசு இனி வருங்காலத்தில் விரைவாகஉற்பத்தியை பெருக்கும் வகையிலான சிறந்தசெயல்திட்டங்களையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புவழங்கக்கூடிய திட்டங்களையும் அறிவித்து, தமிழகத்தைவளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென அகிலஇந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.