வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை
தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 2007-08, 2008-09 ம் ஆண்டுகளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று மதிப்பீடு செய்து 2011ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. வருமான வரியை நிர்ணயித்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு செய்ததால் தனக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் – சூர்யா.
வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராததால் வட்டி விலக்கு பெற உர்மையில்லை- வருமான வரித்துறை
வருமான வரி தரப்பு வாதத்தை ஏற்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சூர்யா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு