ஜார் என்டர்டைன்மென்ட் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் அகமது D.Litt (USA) அறம் வளர்ப்போம் என்ற நிகழ்ச்சியை 15.08.21 அன்று நடத்தினார். இதில் சிறப்பு விருந்தினராக ஆரி அர்ஜுனன் கலந்துகொண்டு அங்கு வந்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுடன் வாங்க பேசலாம் எனும் தலைப்பில் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்ததுடன், இந்த கொரோனா காலகட்டத்தில் மக்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக அவர்களை ஊக்குவித்து பேசினார் நடிகர் ஆரி அர்ஜுனன். வந்தவர்கள் அனைவருக்கும் மறக்க கன்றுகளை பரிசாக வழங்கினார்.
இதற்கு முன்பாக இந்த ஜார் என்டர்டைன்மென்ட் நிறுவனம் நடத்திய மனம் என்னும் மந்திர சாவி நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ்சும் உறவுகளும் புரிதல்களும் நிகழ்ச்சியில் நீயா நானா கோபிநாத்தும்
எல்லாம் இன்பமயம் என்னும் நிகழ்ச்சியில் ஞானசம்பந்தன் அவர்களும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார் என்டர்டைன்மென்ட் நிறுவனர் அகமது தனது அம்மா ட்ரஸ்ட் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையை eat to beat cancer என்ற முன்னெடுப்பை நடத்தி வரும் ஆரி அர்ஜுனன் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளைக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வழங்கினார்.