சாதி மத மோதலின் அடிப்படையில் உருவான உண்மைச் சம்பவப்படம் மதுரை சிங்கம்

சாதி மதம் வகுப்புவாதம் தலைதூக்குகிறது. நண்பர்கள் எதிரிகளாகின்றனர். இதை பயன்படுத்தி சில வன்முறையாளர்கள் மாணவர்களை மிரட்டி பணம் பறிப்பதும் தவறான செயல்களுக்காகவும் அரசியல் லாபங்களுக்காகவும் அதே மாணவர்களை பயன்படுத்துகின்றனர். இதை எதிர்க்கிறான் கதையின் நாயகன் சிம்ஹா. வன்முறையாளர்களை அடித்து துவம்சம் செய்கிறான்.மாணவர்களை ஒருங்கிணைக்கிறான். இறுதியில் பல முடிச்சுகளை அவிழ்க்கிறது இப்படம். தேவி நேனி எனும் பெயரில் ஆந்திராவில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படத்தை தமிழிழுக்கு ரசி மீடியா மேக்கர்ஸ் உருவாக்கியுள்ளது. என்.டி.ஆரின் பேரன் தாரக் அடிதடி ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க நவீனா கதாநாயகியாக நடித்திருக்கின்றனர். அர்ஜூன் தேஜா, சுரேஷ், அன்னபூரணா,தனிஷ்கா,கோட்டி ஆகியோர் நடித்துள்ளனர்  சிரஞ்சீவி, கிருஷ்ணா, நாகேந்திர பிரசாத், சுமன் ஆகியோர் கதாநாயகனாக நடித்த படங்களை இயக்கிவரும், பாலிவுட் பிரபலமான சோனு ஷூட் ஐ தெலுங்கில் முதல் முதலாக அறிமுகபடுத்தியவருமான  நாரா ஷீவநாகு இப்படத்தை இயக்கியுள்ளார். எவரெஸ்ட் எண்டர் டைன்மென்ட் சார்பில் திவ்ய சுந்தரவடிவேலு தயாரித்துள்ளார்.

வசனம்- ஏ.ஆர்,கே.ராஜராஜா
தமிழ் உருவாக்கம் –
ரசி மீடியா மேக்கர்ஸ்
பாடல்கள் –
ஆவடி சே.வரலட்சுமி,
சங்கர் நீதி மாணிக்கம்,
செம்மங்குடி துரையரசன்
இசை – கோட்டி
ஒளிப்பதிவு -D.G.குமார்
தயாரிப்பு- திவ்ய சுந்தரவடிவேலு
கதை திரைக்கதை இயக்கம்- நாரா ஷிவநாகு

மக்கள் தொடர்பு: வெங்கட்