சென்னை, மடிப்பாக்கம், ராமகிருஷ்ணராஜ் நகரைச்சேர்ந்த கீதா, பெ/வ.58, க/பெ.கபிலன் என்பவர் கடந்த19.8.2021 அன்று மாலை, வீட்டினருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, டியோ இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தங்கச்சங்கிலியைபறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து கீதா S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது.
S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவுஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவஇடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராபதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி சங்கிலிபறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1. ராஜேஷ் (எ) ராபர்ட், வ/23, த/பெ.வின்சென்ட், எண்.25, ஏரிக்கரை தெரு, ஜமீன்பல்லாவரம், சென்னை, 2.சிவா (எ) சிவசங்கரன், வ/26, த/பெ.ஶ்ரீராம், எண்.64, பத்மாவதிநகர் 2வது குறுக்கு தெரு, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், 3.லியோ (எ) லியோனார்டு ஜேம்ஸ், வ/28, த/பெ.டேனியல்ஜேம்ஸ், எண்.19/40, சிதம்பரம் தெரு, பாரதிபுரம், ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை, ஆகிய 3 நபர்களை கைதுசெய்தனர்.
விசாரணையில் குற்றவாளிகள் மூவரும் S-7 மடிப்பாக்கம், S-10 பள்ளிக்கரணை, S-15 சேலையூர், S-6 சங்கர் நகர் மற்றும் S-5 பல்லாவரம் ஆகிய காவல் நிலையஎல்லைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று தனியாகநடந்து செல்லும் பெண்களின் தங்கச்சங்கிலிகளைபறித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளிகளிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும்குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 டியோ இருசக்கரவாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணையில், குற்றவாளி ராஜேஷ் (எ) ராபர்ட்மீது மடிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற காவல் நிலையஎல்லைகளில் சுமார் 10 செல்போன் பறிப்பு வழக்குகள்உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் 3 குற்றவாளிகளும் இன்று(29.8.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றஉத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.