வன்னியர் போராட்டத்தை சமூக நீதி போராட்டமாக அங்கீகரித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் காடுவெட்டி குருவின் மகள்

1987 செப்டம்பர் 17 ல் வன்னிய மக்களின் உரிமைக்காக போராட்டம் நடத்திய 21 வன்னிய தியாகிகளை அன்றைய  எம்ஜிஆர் அரசு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது.. நம் உரிமைக்காக உயிர் நீத்த 21 தியாகிகளின்  போராட்டத்தை அங்கீகரித்த இன காவலர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள். உயிர் நீத்த தியாகிகள் குடும்பங்களுக்கு  3 லட்ச ரூபாய் பணம் மற்றும் ஓய்வுதியம் வழங்கினார்.

அதேபோன்று தமிழினக் காவலர் கலைஞர் அவர்களின் வழியை பின்பற்றி மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வன்னியர்  போராட்டத்தை சமூக நீதிப் போராட்டம் என்று அங்கீகரித்து. 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் மற்றும் அவர்கள்  குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார்.

இவ்வாறு சமூகநீதி போராட்ட நாளான  செப்டம்பர் 17 யை சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். எனவே நம்  3 கோடி வன்னியர் சொந்தங்கள் செப்டம்பர் 17 அன்று நம் உயிர் நீத்த 21 தியாகிகளின் உணர்வுகளை மதித்து அவர்களின் திருவுருவப் படங்களை வைத்து நினைவு கூறி சமூக நீதி நாளாக கொண்டாடி மரியாதை செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் எங்களின் சமூகநீதி போராட்டத்தை அங்கீகரித்த தமிழர் தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களுக்கும் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் 3கோடி வன்னியர்களின் சார்பாக நன்றி.. இவ்வாறு கூறியுள்ளார்