கருணைக்கொலை செய்யக்கோரி மூத்திரப்பையுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த முதியவர்..

கருணைக் கொலை செய்யக்கோரி மாற்றுத் திறனாளி மகளுடன் முதியவர் கையில் முத்திரப் பையை சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.  திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே அணலை கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை (81). இவருக்கு தவசுமணி, லட்சுமி என்ற, 2 மகள்கள் உள்ளனர்.கடந்த, 2013ல் வீரமலையின் மூத்த மகன் சக்திவேல் சாலைவிபத்தில் இறந்து விட்டார். மாற்றுத் திறனாளியான தவசுமணி, அணலை கிராமத்தில் தந்தையுடன் வசித்து வருகிறார்.இவரது தங்கை லட்சுமி குளித்தலையில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இந்நிலையில், கிட்னி பாதிக்கப்பட்ட வீரமலைக்கு அடிக்கடி டயாசிலிஸ் செய்ய வேண்டும். இதனால் தனது மகன் சக்திவேல் விபத்தில் இறந்ததற்கு இழப்பீடாக வந்த பணத்தை தனது வங்கி கணக்கில் வைத்திருந்தார்.அந்த கணக்கிற்கு இளைய மகள் லட்சுமியை வாரிசுத் தாரராக நியமித்திருந்தார்.
என்னைப்போல் யாரும் குடிகாரன் ஆகிவிடாதீர்கள் – மதுவுக்கு அடிமையான இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை. ‘தந்தையை தானே பார்த்துக் கொள்வதாகவும், மருத்துவச் செலவுகள் அனைத்தையும் கவனித்துக் கொள்வதாகவும் கூறிய, இளைய மகள் லட்சுமி, வீரமலையிடம், ₹ 3 லட்சம் பணம் மற்றும் அரை ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொண்டதாகவும் அதன்பிறகு, தந்தையின் அன்றாட மருத்துவச் செலவுக்கு கூட பணத்தை தர லட்சுமி மறுத்துவிட்டதாக தவசுமணி குற்றம்சாட்டுகிறார்.அரை ஏக்கர் நிலத்தை விற்பனை செய்த பணத்தையும் லட்சுமி அவருக்கு கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது குடியிருக்கும் வீட்டையும் விற்பனை செய்யப் போவதாக கூறி லட்சுமி, வீட்டை காலிச் செய்து தரும்படி தனது கணவர் ராஜேந்திரனுடன் வந்து வீரமலை, தவசுமணியை மிரட்டுவதாகவும் இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் பயனில்லை என்கிறார்.
பிரதமர் மோடி கொடுத்த காசு தரமுடியாது.. அடம்பிடிக்கும் இளைஞர்.. விழிபிதுங்கும் வங்கி ஊழியர்கள்

இந்நிலையில்,ஒரு கையில் சிறுநீர் பை, மற்றொரு கையில் ‘நீதி கிடைக்கவில்லை என்றால் கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள்’ என்ற கோரிக்கை பதாகையுடன் வீரமலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.அவருடன் மாற்றுத்திறனாளி மகள் தவசுமணி, அவரது கணவர், இரண்டு பெண் குழந்தைகளும் வந்திருந்தனர்.சிறுநீரக நோயாளியான வீரமலை மற்றும் அவரது மாற்றுத் திறனாளி மகள் தவசுமணி கூறியபோது, “லட்சுமிக்கு எழுதிக் கொடுத்த தான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். நாங்கள் இருவரும் வாழ்வதற்கான வழிவகையை அரசு செய்து தரவேண்டும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.