தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்பவிளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும்நோக்கத்திலும், ஒன்றிய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப்பட்டியலில் சேர்த்திட மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்அறிவுரையின்படி கோரப்பட்டது. அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை ஒன்றியஅரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுஅமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து“புதிய கேலோ இந்தியா” திட்டத்தின் கீழான“விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும்உள்ளடக்கி ஊக்குவித்தல்” (Promotion of inclusiveness through Sports) என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினைசேர்த்துள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றியஅரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்குபெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக்கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள்மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பலகூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலைஆகும். தற்போது ஆண்கள், பெண்கள் என்றுஇருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்றுவருகின்றனர். தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும்,கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாதுஇடம் பெற்று வருகிறது. ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்துசிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியவிளையாட்டு ஆணையத்தையும் (Sports Authority of India) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.