முதல்வர் ஸ்டாலினுக்கு காடுவெட்டி குருவின் மகள் பாராட்டு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியின் மேல்மாம்பட்டு என்ற கிராமத்தில் வசித்த கோவிந்தராஜ் என்ற நம் சமூகத்தை சேர்ந்தவர் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் பணிக்கன் குப்பத்தில் உள்ள முந்திரி ஆலையில் வேலையில் ஈடுபட்டு பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் மற்ற 5 நபர்களால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர் தனது திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை அறிந்தும் கோவிந்தராஜ் அவர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். சிபிசிஐடி விசாரணை முடிவில் அடித்து கொல்லப்பட்டது உண்மை என்று அறிந்ததால் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் மற்ற ஐந்து நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை அறிந்தும் தவறு செய்தவர்களை தண்டிக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட கோவிந்தராஜ் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க உத்தரவிட்ட மாண்புமிகு முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

குரு. விருதாம்பிகை மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள்.