இசை தான் படத்திற்கு உயிர் இசையமைப்பாளர் ஜூபின்

ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் மேனன், தம்பிராமய்யா ஆகியோரது நடிப்பில் மோகன்.G இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ” ருதரத்தாண்டவம் ” படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜூபின் தனது இசை பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்டவை..

சிறு வயதுதிலிருந்தே எனக்கு இசையில் பயங்கர ஆர்வம். எனது 6 வயதிலேயே பியானோ கற்றுக்கொண்டேன்.இசையமைப்பாளர் A.R.ரகுமானையுடைய குருவான ஜேக்கப் ஜான் என்பவர் தான் எனது முதல் குரு. ஜி.வி.பிரகாஷின் குருவான தாஸ் டேனியல் என்பவர் எனது இரண்டாவது குரு, எனது வழிகாட்டி அவரால்தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
விண்மீன்கள் படம் தான் இசையமைப்பாளராக எனது முதல் படம். தொடர்ந்து மோகன்.G அவர்களுடன் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் என தொடர்ந்து மூன்று படங்களுக்கு பணியாற்றுள்ளேன்.

படத்திற்கு எப்பேற்பட்ட காட்சிகளாக இருந்தாலும் சரி, சண்டைக் காட்சிகளாக இருந்தாலும் சரி, செண்டிமெண்ட் காட்சிகளாக இருந்தாலும் சரி அதற்கு உயிர் கொடுப்பது என்னவோ இசைதான். ஒரு படத்திற்கு உயிரே இசைதான்.
ருத்திர தாண்டவம் படத்திற்கு இசையமைத்தது மிகவும் சவாலாக இருந்தது. பொதுவாகவே கோர்ட் சீன்களுக்கு இசையமைப்பது கஷ்டம் ஆனால் ருத்ர தாண்டவம் படத்தில் 40 நிமிடம் வரக்கூடிய கோர்ட் சீனிற்கு இசைப்பது என்பது மிகவும் சவாலாக இருந்தது. ஆக்ரோஷமான கோபம், அழுகை, கலந்து வரும் அந்த காட்சிக்கு இசையமைப்பது சிறந்த அனுபவமாக இருந்தது.
ருத்ர தாண்டவம் படம் வெளியான அன்று மாலையே இன்னொரு படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். அது என் உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். வருகின்ற தீபாவளி முடிந்த பிறகு அந்த படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

உதவி இயக்குநராகவோ, நடிக்க வாய்ப்பு தேடுபவரோ, சினிமாவில் வேறு எந்த வேலையாக இருந்தாலும் சரி முயற்சியும், திறமையும் இருந்தால் என்றாவது ஒருநாள் நாம் ஜெயித்து விடலாம் என்பதற்கு இசையமைப்பாளர் ஜூப்பினும் ஒரு எடுத்துக்காட்டு.