தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக்கோரிக்கை மீதான அறிவிப்புகள் 2021-2022 தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று 21.10.2021ல் நடைபெற்றது.
இன்று (21.10.2021) சென்னை தமிழ்நாடு சுற்றுலாத்துறை  அலுவலகத்தில்  தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேயதன் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக்கோரிக்கை மீதான அறிவிப்புகள் 2021-2022ன் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இவ் ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சயதரமோகன், இ.ஆ.ப., சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சயதீப் நயதூரி இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் fyaJ கொண்டனர்.

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு, வருவாய், அயநியச் செலவாணி ஈட்டுதல், மண்டல வாரியான வளர்ச்சி ஆகிய பொருளாதார மேம்பாட்டிற்கு சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றி வருகின்றது. இயதியாவில் சுற்றுலாத்துறையில் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக தொடர்யது நீடித்து வருகின்றது. 2019 ஆம் ஆண்டில் வெளிநாடு சுற்றுலா பயணிகளின் வருகையில் முதலிடத்தையும் உள்நாடு சுற்றுலா பயணிகளின் வருகையில் இரண்டாவது இடத்தையும் தமிழ்நாடு பெற்றுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேயதன் தலைமையில் மானிய கோரிக்கையின் அறிக்கை செய்யப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான தற்போதைய நிலை மேலும், பல்வேறு திட்டங்களுக்கான அரசணை வேண்டி அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

1. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளின் வருவாய்யை அதிகரிப்பதற்காக முன்னனி இணைய தள பயண நிறுவனங்களின் இணையதளத்தில் இடம் பெற செய்ததின் மூலம் 2021 செப்டம்பர் மாதம் 137 முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

2. கன்னியகுமரியில் அமையதுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் இரவிலும் கண்டுகளிக்கும் விதமாக லேசர் தொழில் நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் செய்வதற்கு கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

3. தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கும் தமிழ் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தின் சரித்திரம் பேசும் துறைமுக நகரமான பூம்புகார் நகரம் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் புனரமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

4. பிச்சாவரத்தில் அமையதுள்ள அலையாத்திக் காடுகளை காண்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். மேலும், இச்சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்துதரும் வகையில் பூங்கா, திறயதவெளிமுகாம், காட்சி கோபுரம், படகு குழாம், தங்கும் அறைகள் மற்றும் உணவகம் போன்றவற்றை பிச்சாவரம் படகு குழாம் பகுதியில் மேம்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

5. தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் விதமாக கொடைக்கானல் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்குவதற்காக ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 20.10.2021ல் இராமேஸ்வரத்தில் தேர்யதெடுக்கப்பட்ட நிலத்தினை Consultant ஆல் தலஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும், கொடைக்கானல் நிலத்திற்கான தலஆய்வு விரைவில் நடைபெற உள்ளது.

6. இளைஞர்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ள சாகச சுற்றுலாக்களை ஊக்குவிக்கும் பொருட்டு சாத்திய கூறுகளை ஆராய்வதற்கு தேர்யதெடுக்கப்பட்ட முகாமை மூலம் தலஆய்வு பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

7. சாத்திய கூறுகள் உள்ள அணைக்கட்டு பகுதிகள் திறயதவெளி முகாம்கள் படகு சவாரி, உணவகம் மற்றும் பல்வேறு சுற்றுலா தலங்களின் சாகச சுற்றுலா சுற்றுச்சூழல் திறயதவெளி முகாம்கள் ஏற்படுத்துவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

8. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நீர்வீழ்ச்சி அழகினை கண்டு ரசிக்க பார்வையாளர் மாடம் மற்றும் பிற வசதிகள் எற்படுத்தும் வகையில் சுற்றுலாப் பெரும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

9. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல் சுற்றுலாத் தலங்களின் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல் கூடுதல் தங்கும் இடங்கள் உருவாக்குதல் சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தினை அதிகரித்தல், அயநிய செலவாணியை அதிகம் ஈட்டுதல் தனியார் மற்றும் அயநிய முதலீட்டை ஊக்குவிக்குதல் மற்றும் பல்வேறு வகையான சுற்றுலாக்களை மேம்படுத்துதல் ஆகிய காரணிகளை உள்ளடக்கிய சுற்றுலா பெருயதிட்டம்  தயாரிக்கப்பட்டு வருகிறது.

10. சுற்றுலாவிற்கு தொழில் நிலை அயதஸ்து வழங்குதல். சுற்றுலாத் தலங்கள் மற்றும்
அதிகம் பிரபலம் அடையாத சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துதல். பங்குதாரர்களின் பங்களிப்பை ஊக்குவித்தல், சுற்றுலா தலங்களில் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதில் தனியார் முதலீட்டை அதிகரித்தல். தொழில் முனைவோர்களை ஊக்குவித்தல், சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் அவர்கள் தங்கும் கால அளவினை நீட்டித்தல் போன்ற நோக்கங்களை உள்ளடக்கியதாக கொண்ட தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

11. தமிழ்நாட்டில் சுற்றுலா இடங்களை மேம்படுத்தும் வகையில் நினைவுச் சின்னங்களை ஒளியூட்டுதல், நிலச்சீரமைப்பு ஒலி, ஒளி காட்சி அமைத்தல் பாரம்பரியச் சின்னங்கள் புனரமைத்தல், நீர்வீழ்ச்சியின் அழகினை கண்டு ரசிக்க பார்வையாளர் மாடம் மற்றும் கூடுதல் வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் விதமாக சுற்றுலாத் தலங்கள் வளர்ச்சித் திட்டம்  உருவாக்கப்பட்டு வருகிறது.

12.முதலியார்குப்பம் படகு குழாம் அருகில் ஓடியூர் ஏரியில் அமையதுள்ள தீவுப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்றுவர சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் இங்கு நீர் விளையாட்டுகள் கடற்கரை விளையாட்டுகள் தேநீர் விடுதி போன்ற வசதிகள் ரூபாய் 50.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பதற்கு நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.

மேலும் உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2021) தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முகநூல் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஏ முதல் இசட் வரையிலான சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத இடங்களை சிறயத முறையில் புகைப்படம் எடுத்து முகநூலில் வெளியிட புகைப்பட கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கிடையே போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு ஆதரவாளர்களான நட்சத்திர ஓட்டல் மற்றும் ரிசாட் நிர்வாகத்தால் தங்குவதற்கான பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து  சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேயதன் மேற்கண்ட போட்டியில் கலந்து கொண்டு சிறப்பு புகைப்படங்களை அளித்து வெற்றி பெற்ற ஐந்து புகைப்பட கலைஞர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.