இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால்பள்ளிகள் இயங்காத நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விபாதிக்கப்பட்டுள்ளதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளதை சரி செய்யதமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.   இல்லம் தேடிக் கல்விதிட்டத்தை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்வட்டம், முதலியார்குப்பம் கிராமத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (27-10-2021) துவக்கி வைத்தார்கள்.  திட்டத்தை துவக்கி வைத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசுகுழந்தைகளின் பள்ளிக் கல்வி மற்றும் எதிர்காலத்தில் மிகுந்த அக்கறைகொண்டுள்ளது என்றும்,  இல்லம் தேடிக் கல்வி திட்டமானது குடியிருப்புஅடிப்படையில் மாணவ, மாணவியர்களை அவர்கள் வசிப்பிடம் அருகே சென்றுதன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்கவழிவகை செய்கிறது என்றும், இத்திட்டத்தினை பெற்றோர்களும், குழந்தைகளும், பகுதி மக்களும், தன்னார்வலர்களும் நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தி, அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக ஒன்றிணைத்து, நம்குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான பாதையை அமைத்துகொடுப்பதற்காக வகுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்கள்.  

மேலும் தனது உரையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டமானதுஒரு அரசு திட்டமாக மட்டுமில்லாமல் பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஆசிரியப் பெருமக்கள் பலதுறையைச் சார்ந்த பிரபலங்கள் எனஅனைவரும் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு இயக்கமாகதிட்டமிடப்பட்டுள்ளது என்றும்; இம்முயற்சிக்கு மக்கள் அனைவரின் தீவிர பங்கெடுப்பு தேவைப்படுகிறது என்றும்;  நம் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக அரசுடன் இணைந்து செயலாற்றவும்,  தமிழ்நாட்டிலுள்ள படித்தவர்கள் இத்திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பங்கேற் வேண்டுமென்றும்முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.    இல்லம் தேடிக் கல்விதிட்டத்தின் அடிப்படையில் இக்கல்வியாண்டில் 6 மாதகாலத்திற்கு, வாரத்திற்கு 6 மணிநேரம் தன்னார்வலர்களின் மூலம் மாணவர்களைஅன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாகப் பங்கேற்கச்செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதுஇல்லம் தேடிக் கல்விதிட்டமானது தெரிவு செய்யப்பட்ட விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய 12 மாவட்டங்களில் 2 வார காலத்திற்கு முன்னோட்ட அடிப்படையில்செயல்படுத்தப்பட்டு, அதன் வாயிலாகக் கிடைக்கப்பெறும் சிறந்த கற்றல்விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, பதிவு செய்துள்ள தன்னார்வலர்கள்கிராம அளவில் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாகத் தேர்வு செய்யப்படுவர்.  தன்னார்வலர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கிய பின் இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தில் இணைக்கப்படுவர்.  நவம்பர் 15 ஆம் தேதிக்குப் பின்னர்அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் படிப்படியாகவும் தொடர் பணியாகவும்நடைபெறும்.