அதிகமாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் நடமாடும் ஊடுகதிர் வாகனம் (Mobile X-Ray Baggage Scanner Vehicle) மூலம் பொதுமக்கள் உடைமைகள் சோதனை.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள்செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பேரிடர் காலத்தில்கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்துபொதுமக்களை பாதுகாக்கும் பணியிலும் சென்னை பெருநகர காவல்துறை சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு மார்கெட் மற்றும் மால்களிலும்,வெளியூர் செல்வதற்காக   பேருந்து நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்களிலும் அதிகளவுகூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவுகூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்29.10.2021 முதல் 04.11.2021 அன்று இரவு வரை சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறுசிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும், கோயம்பேடு பேருந்து நிலையம்,  புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை  எம்.சி.ரோடு, தி.நகர்,  தாம்பரம் இரயில்வே ஸ்டேஷன், தாம்பரம்தற்காலிக பேருந்து நிலையம், பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையம், கே.கே.நகர் தற்காலிகபேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் 29.10.2021 முதல் 04.11.2021 வரை சென்னை பெருநகரகாவல்துறைக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நடமாடும் ஊடுகதிர் வாகனம் மூலம் (Mobile X-ray Baggage scanner vehicle) பொதுமக்கள் கொண்டு வரும் உடைமைகள் சுழற்சி முறையில் சோதனை செய்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் BDDS பயிற்சி பெற்ற காவலர்கள் 2 ஷிப்ட்களாக பணிஅமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை தீபாவளி பண்டிகை வரை மேற்கூறிய இடங்களில் தொடர்ந்து நடத்தப்படும் எனதெரிவிக்கப்படுகிறது.