மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள “மணற் சிற்பத்தை” திறந்து வைத்து பார்வையிட்டு பணியின் போது உயிரிழந்த காவலர்களின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று இந்தியா முழுவதும் பணியின்போது இறந்தகாவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்காக காவலர் வீர வணக்க நாள்அனுசரிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறைதலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில்காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு, பணியின்போது இறந்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து, மௌன அஞ்சலி செலுத்தி, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதைசெய்யப்பட்டதுகாவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும்அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவிட்டதன்பேரில், 21.10.2021 முதல்31.10.2021 வரையிலான 11 நாட்கள்காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரமாக (Police Commemoration Awareness Week) கடைபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., (30.10.2021) மாலை மெரினா கடற்கரையில ாவலர் வீர வணக்கவிழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மற்றும் ICAT Design & Media College இணைந்து  உருவாக்கிய மணற் சிற்பத்தை  திறந்து வைத்துபார்வையிட்டார். இதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள காவலர்வீரவணக்க வார விழிப்புணர்வு பாதகையில் கையெழுத்திட்டார். மேலும் பணியின்போதுமரணமடைந்த காவல் ஆளிநர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் ஞ்சலி செலுத்தி, மணற்சிற்பத்தை உருவாக்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.பிரதீப்குமார்,இ.கா.ப., (போக்குவரத்து), முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., (தலைமையிடம்), இணைஆணையாளர் திருமதி.P.K.செந்தில்குமாரி, இ.கா.ப., (போக்குவரத்து/தெற்கு), திருமதி.S.லலிதாலஷ்மி, இ.கா.ப., (போக்குவரத்து/ வடக்கு), துணை ஆணையாளர் திருமதி.திஷாமிட்டல், இ.கா.ப ( மைலாப்பூர்) திரு.ஓம்பிரகாஷ் மீனா, இ.கா.ப, (போக்குவரத்து/கிழக்கு) திரு.V.K.சுரேந்திரநாத்(போக்குவரத்து/ திட்டமிடல்), காவல் அதிகாரிகள் , ICAT design and Media College சேர்மன்திரு.குமார் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

மேலும், இன்று (30.10.2021) காலை P-1 புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்குட்டஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு, காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செம்பியம் சரகஉதவி ஆணையாளர் திரு.செம்பேடு பாபு அவர்கள் மற்றும் இறந்த காவலர்களின்குடும்பத்தினர்கள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு, வீர மரணமடைந்த காவல் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் அஞ்சலிசெலுத்தப்பட்டு, கானா பாடல் மற்றும் காவல்துறையின் பெருமைகள் மற்றும் கொரோனா பேரிடர்காலத்தில் தொற்று பரவாமல் தடுத்து பணியின்போது வீரமரணமடைந்த காவல்துறையினர்குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.  

மேலும், இன்று (30.10.2021) மாலை, E-2 இராயப்பேட்டை காவல் நிலையஎல்லைக்குட்பட்ட இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு, காவல்துறை சார்பில் சைக்கிள் பேரணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் திருமதி.திஷா மிட்டல், இ.கா.ப., அவர்கள் கலந்துகொண்டு சைக்கிள் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில்காவலர்களின் தியாகங்கள் மற்றும் கொரோனா காலத்தில் காவல்துறையினரின் அர்பணிப்புகள்பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இராயப்பேட்டை சரக உதவி ஆணையாளர்திரு.லஷ்மணன் மற்றும் காவல் பணியின் போது உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினர் ஆகியோர்கலந்து கொண்டனர்.