தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குநருக்கு வழங்கினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.11.2021) தலைமைச் செயலகத்தில், சென்னை எழும்பூரில் அமைந்துள் மாநில கட்டுப்பாட்டு  அறைக்கு British Standards Institution-னால் வழங்கப்பட்ட ISO 27001:2013  சர்வதேச தரச்சான்றினை காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபவிடம் வழங்கினார்சென்னை எழும்பூரில் அமைந்துள்ள  மாநில  காவல்  கட்டுப்பாட்டு  அறையில்அவசர கால உதவி எண்கள் 100, 112 மற்றும் 101 அழைப்புகள் கையாளப்படுகின்றன. இது நவீன ஒருங்கிணைந்த தரவு தளம் மற்றும் இதர தொழில்நுட்பகட்டமைப்புகளுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தில்இதுநாள் வரையில் 1.12 கோடி அவசர கால அழைப்பு விவரங்கள் மற்றும் 14.5 இலட்சம்காவலன் செயலி பயன்படுத்துவோரின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளனஇந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தின் தகவல்கள் பாதுகாப்புஅமைப்பிற்கு British Standards Institution-னால் ISO 27001:2013 சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.  இச்சான்றானது,  இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடுகாவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டிற்கு பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த நிகழ்ச்சியில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (சைபர் கிரைம்)  மரேஷ்புஜாரி, இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (தொழில்நுட்ப சேவை) வினித்தேவ் வான்கடே, இ.கா.ப., காவல்துறை துணைத் தலைவர் (தொழில்நுட்ப சேவைஎஸ். மல்லிகா, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.