தமிழ்நாடு வக்ஃப் வாரிய பணியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் எழுத்து தேர்வு வரும் 13 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஆன்லைன் தேர்வு என்றாலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று அங்கு தேர்வுகளை எழுத வேண்டும் என தமிழ்நாடு வக்ஃப் வாரியம் அறிவித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையும் அதனை தொடர்ந்து வெள்ளப்பெருக்கும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 10ஆம் தேதி முதல் ஒரு வாரம் வரை கனமழை நீடிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையாலும், அதனைத் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு, போக்குவரத்து துண்டிப்பு போன்ற காரணத்தால் தேர்வுகளில் தேர்வர்கள் பங்கேற்பது கடினம். எனவே, தமிழக அரசு நவம்பர் 13 அன்று நடைபெறவுள்ள இந்த தேர்வை ஒத்திவைத்து வேறொரு நாளில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தொடர் கனமழை: வக்ஃப் வாரிய தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: