முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்படாமல்,  கேரளத்தின் நிர்பந்தம்  நீர் இருப்பைக் குறைத்திருக்கும்  திமுக அரசைக் கண்டித்தும்; உண்மைகளை மறைத்து சப்பைக் கட்டு கட்டும்  தமிழ் நாடு நீர்பாசனத் துறை அமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும்; நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தியும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளரும், மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்  சீனிவாசன் தலைமையிலும்; திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளரும், மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன், தலைமையிலும்; 

மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையிலும்; மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில்,  கழக புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார், தலைமையிலும்;

 

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மாவட்டக் கழகச் செயலாளர் ராஜன் செல்லப்பா, தலைமையிலும்; ராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  அ. அன்வர்ராஜா, ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமையிலும்; 

சிவகங்கை மாவட்டக் கழகத்தின் சார்பில், மாவட்டக் கழகச் செயலாளர் செந்தில்நாதன், தலைமையிலும், நடைபெற்றது. மேற்கண்ட ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.