வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்கொள்ள தயார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.மாநிலத்தின் சராசரி மழை அளவு 16.84 மி.மீட்டர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 74.70 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.  வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 09.11.2021 வரை 362.94 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 248.3 மி.மீட்டரை விட 46 சதவீதம் கூடுதல் ஆகும்வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில்நகர்ந்து 11.11.2021 காலை தமிழக கரையை நெருங்கக்கூடும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளதுஇன்று (9.11.2021) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை இராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கன மழையும்,கடலூர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, விருதுநகர் மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை (10.11.2021) விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதி கன மழையும்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கன மழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்பத்தூர், தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, பேரிடர் குறித்தஅறிவிப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் 434 இடங்களில் முன்னெச்சரிக்கை தகவல்கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. ந்த முன்னெச்சரிக்கை கருவிகள் மூலம், சைரன் ஒலி மற்றும் பொது அறிவிப்பு வாயிலாகவும், மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில், தடையில்லா தகவல் தொடர்பை உறுதி செய்யும் வகையில், ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு இயக்குநர், BSNL. JIO, Vodafone, Airtel நிறுவனங்ளின் அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.  மேற்சொன்ன தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கென ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் 50 நடமாடும் டவர்கள் (Cellular on Wheels) தயார் நிலையில் உள்ளன. பேரிடர் காலங்களில், தொலைத்தொடர்பு அமைப்புகளை சீரமைக்க தேவையான போக்குவரத்திற்கு மாவட்ட நிருவாகம் உதவி புரியும்.  எரிபொருள் மற்றும் எரிவாயு உருளைகள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இன்டேன், பாரத் கேஸ், எச்.ப்பி. கேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு, எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருள் இருப்பை உறுதி செய்யவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் இருப்பு நிலையங்கள், எண்ணெய் குழாய்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் 20 முதல் 30 சென்ட்டி மீட்டர் மழை எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்க்கண்ட முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை / வெள்ள நீர் சூழ வாய்ப்புள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை கண்டறிய வேண்டும்

பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான திட்டத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் பணியினை உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வர மறுக்கும் நிலையில், அவர்களை சமாதானப்படுத்தி நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
 
பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு உரிய உதவிகள் செய்து தர ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
 
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு வழங்கும் பொருட்டு, போதுமான அளவு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைப்பதற்கும், சமையல் செய்வதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
 
பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக விழும் மரங்களை உடனடியாக வெட்டி அகற்ற தேவையான மர அறுப்பான்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
பாதிப்பிற்குள்ளாகக்கூடிய நீர்நிலைகளை கண்டறிந்து, இந்த நீர்நிலைகளில் ஏற்படும் உடைப்புகளை உடனடியாக சரி செய்ய தேவையான அளவு மணல் மூட்டைகளை வைத்திருக்க வேண்டும்.

 

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது, 22 நிவாரண முகாம்களில், 1,723 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 11,49,570 உணவுப் பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ள 400 பகுதிகளுள், 216 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள்  மூலம் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 184 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.  மழை நீரால் சூழப்பட்டுள்ள 16 சுரங்கப்பாதைகளில், 14 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 2 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. சாலைகளில் விழுந்த 116 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1265 மருத்துவ முகாம்கள் மூலம் 38,780 நபர்கள் பயனடைந்துள்ளனர். ழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 46 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 JCB-களும், 325 இராட்சத பம்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 6694 புகார்கள் வரப்பெற்று, 2840 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.  எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலர் /வருவாய் நிருவாக ஆணையர் பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், இ.ஆ.ப., நில நிருவாக ஆணையர் எஸ். நகராஜன், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.