மாதத்தின் நட்சத்திர காவலர் “ ( Police Star of the Month) விருது-ஆணையர் சங்கர் ஜியால் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக தினசரி வழங்கும் பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில  சென்னை  பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப உத்தரவின் பேரில், கூடுதலாக ஒவ்வொரு மாதமும்  தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிலான குழு சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மற்றும் மெச்சத்தக்கவகையில் பணி செய்யும் காவல் ஆளிநர்களைகண்டறிந்து  அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு மாதத்தின் நட்சத்திர காவலர் விருது” (Police Star of The Month)  வழங்க  முடிவு செய்யப்பட்டது.  ஒவ்வொரு மாதமும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட காவல் பணியாளர்களுக்கு   ரூ. 5,000 பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.  இதன்படி தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் அவர்களின் தலைமையிலான குழுவால் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான மாதத்தின் நட்சத்திர காவலர் விருதுக்கு G-7 சேத்துப்பட்டு (ச&ஓ) காவல் நிலைய  தலைமைக் காவலர் சரவணக்குமார், (த.கா.26286) என்பவர் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை, சேத்துப்பட்டு, பகுதியில் வசிக்கும் மூசா, வ/73, த/பெ.குஞ்சுவரன் குட்டி என்ற முதியவரை கடந்த 03.10.2021 அன்று கடத்திச் சென்று ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். கடத்தப்பட்ட முதியவரை மீட்க நீலாங்கரை உதவி ஆணையாளர்தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது மேற்படி கடத்தலில் தொடர்புடைய குற்றவாளிகள் எழும்பூர் பகுதியில் காரில் சுற்றி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கீழ்பாக்கம் துணை ஆணையாளர் அவர்கள் தனிப்படையைச் சேர்ந்த G-7 சேத்துப்பட்டு காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.சரவணக்குமார் (த.கா.26286) குற்றவாளிகள் வந்த காரை வழிமறித்து மடக்கி பிடிக்க முயன்றுள்ளார். குற்றவாளிகள் காரை நிறுத்தாமல் தப்பிச்சென்றுள்ளனர்.தலைமைக்காவலர் திரு.சரவணக்குமார்  ுணிச்சலுடன் காரின் பேனட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் தொங்கியபடிச் சென்று  நுங்கம்பாக்கம் பகுதியில் மேற்படி காரை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி கடத்தப்பட்ட மூசாவை மீட்டு குற்றவாளிகள் 1.குமார் (எ) அறுப்பு குமார், வ/44, த/பெ.ரவி, 2.பிரகாஷ், வ/33, த/பெ.பிச்சைபிள்ளை, 3.சங்கீதா, வ/28, க/பெ.காந்தி, ஆகிய மூவரை  கைது செய்தார். அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.25 லட்சம்,               2 தங்க மோதிரங்கள், 2 கைக்கடிகாரங்கள், 3 செல்போன்கள், 1 கைத்துப்பாக்கி மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா. அவர்கள் மாதத்தின் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட                      G-7 சேத்துப்பட்டு காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.R.சரவணக்குமார், (த.கா.26286) என்பவரை இன்று (09.11.2021) மாலை நேரில் அழைத்து  மாதத்தின் நட்சத்திர காவலர் விருதுக்குரிய ரூ.5 ஆயிரம் பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் 23 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்து அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  கூடுதல் ஆணையாளர்  முனைவர் J.லோகநாதன், இ.கா.ப, (தலைமையிடம்), இணை ஆணையாளர் திரு.சாமூண்டிஸ்வரி, இ.கா.ப (தலைமையிடம்) காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.